
கர்நாடக சட்டசபை தேர்தல் - ஓபிஎஸ் அணியினர் எடியூரப்பாவுடன் திடீர் சந்திப்பு
செய்தி முன்னோட்டம்
கர்நாடக சட்டசபை தேர்தல் மே 6ம் தேதி நடைபெறவுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான பணிகளும் நடந்து வருகிறது.
வாக்குபதிவினை இம்முறை அதிகரிக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
தமிழர்கள் அதிகமுள்ள 10 தொகுதிகளில் 2 அல்லது 3 தொகுதிகளில் போட்டியிட அதிமுக தலைமை விரும்புவதாக சமீபத்தில் தகவல்கள் வெளியானது.
இந்நிலையில் தற்போது கர்னாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அணியினருடன் புகழேந்தி சந்தித்து பேசியுள்ளார்.
தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
பின்னர் இது குறித்து புகழேந்தி கூறுகையில், எடியூரப்பாவிடம் தற்போதைய அரசியல் நிலை குறித்து எடுத்து கூறியுள்ளோம்.
கர்நாடகாவில் தமிழர்கள் வசிக்கும் தொகுதிகளை ஒதுக்கீடு செய்யக்கோரி கோரிக்கை வைத்துள்ளோம் என்று கூறினார்.
ட்விட்டர் அஞ்சல்
கர்நாடக சட்டசபை தேர்தல் - ஓபிஎஸ் அணியினர் எடியூரப்பாவுடன் திடீர் சந்திப்பு
#BREAKING || கர்நாடக தேர்தல்...எடியூரப்பா உடன் ஓபிஎஸ் அணியினர் திடீர் சந்திப்பு#karnatakaelection2023 | #Yediyurappa | #ops | #aiadmk | #Pugalenthihttps://t.co/Qi62BD3vZu
— Thanthi TV (@ThanthiTV) April 7, 2023