LOADING...
கன்னியாகுமரி சுசீந்திரம் கோயில் திருவிழா: ஜனவரி 2ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
கன்னியாகுமரியில் ஜனவரி 2ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

கன்னியாகுமரி சுசீந்திரம் கோயில் திருவிழா: ஜனவரி 2ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

எழுதியவர் Sekar Chinnappan
Dec 29, 2025
03:49 pm

செய்தி முன்னோட்டம்

கன்னியாகுமரி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற சுசீந்திரம் தாணுமாலய சுவாமி திருக்கோயில் மார்கழித் திருவிழாவை முன்னிட்டு, வரும் ஜனவரி 2, 2026 (வெள்ளிக்கிழமை) அன்று மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் மார்கழித் திருவிழா மிகவும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஜனவரி 2-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுப்பார்கள். இதைக் கருத்தில் கொண்டு, பக்தர்கள் சிரமமின்றி திருவிழாவில் பங்கேற்க ஏதுவாக இந்த உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

விடுமுறை

விடுமுறை யாருக்கெல்லாம் பொருந்தும்?

இந்த விடுமுறை கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்குப் பொருந்தும். இருப்பினும், அன்று நடைபெற வேண்டிய பொதுத் தேர்வுகள் அல்லது முக்கியப் போட்டித் தேர்வுகள் ஏதேனும் இருந்தால், அவை திட்டமிட்டபடி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 2 ஆம் தேதி அளிக்கப்படும் இந்த உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் வகையில், வரும் ஜனவரி 24, 2026 (சனிக்கிழமை) அன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வேலைநாளாக இருக்கும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. சுசீந்திரம் கோயிலில் சிவனும், விஷ்ணுவும், பிரம்மாவும் ஒரே வடிவத்தில் தாணுமாலயனாகக் காட்சியளிப்பது தனிச்சிறப்பாகும்.

Advertisement