Page Loader
3,500 ஆண்டு பழமையான மாமரம் - காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலின் சிறப்புகள் 
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலின் சிறப்புகள்

3,500 ஆண்டு பழமையான மாமரம் - காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலின் சிறப்புகள் 

எழுதியவர் Siranjeevi
Apr 18, 2023
05:01 pm

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தில் பல கோவில்கள் சிறப்பு வாய்ந்ததாகும், சக்தி வாய்ந்ததாகவும் உள்ளது. அதில் ஒன்று தான் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஏகாம்பரநாதர் கோவில். இந்த கோவில் 3 ஆயிரத்து 500 ஆண்டு பழமை வாய்ந்த மாமரம் தற்போது மாங்காய் காய்க்க தொடங்கி உள்ளது. இந்த ஏகாம்பரநாதர் கோவிலுக்கு நாள் தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவது உண்டு. பஞ்ச பூதங்களில் மண் ஸ்தலமாக விளங்குகிறது இந்த புகழ்பெற்ற காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவில். மேலும், ஆந்திரா, கர்நாடகா என பல மாநிலங்களில் இருந்து வந்து ஏகாம்பரநாதரையும், ஏலவார்குழலி அம்பாளையும் வழிபட்டு செல்கின்றனர்.

பழமையான கோவில் 

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலின் சிறப்புகள் என்ன?

இந்த கோவிலின் சிறப்பே இந்த பழமை வாய்ந்த மாமரம் தான். அம்பாள் தவம் செய்த போது சிவன் மரத்தின் கீழ் காட்சி தந்து திருமணத்தை முடித்ததாக கூறப்படுகிறது. இதனாலேயே இந்த கோவிலில் திருமணங்கள் அதிகம் நடைபெறுகிறது. மேலும் இந்த மாமரத்தின் 4 கிளைகளும் 4 வேதங்களை குறிக்கும் தெய்வீக மரமாக கருதப்படுகிறது. தொடர்ந்து இந்த மாமரம் நான்கு விதமான சுவைகளில் காய்விடுகிறது, இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, கசப்பு ஆகும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இந்த மாங்கனியை உட்கொண்டால் புத்திர பாக்கியம் உண்டாகும் என்பது ஐதீகம். எனவே தற்போது இந்த மாமரத்தில் காய்காய்க்க தொடங்கியுள்ளதால் பக்தர்களும் காண கூட்டம் வருகிறது.