Page Loader
கள்ளக்குறிச்சியில் கல்லூரி மாணவரை கொன்று புதைத்த நண்பர்கள் - திடுக்கிடும் தகவல்
கள்ளக்குறிச்சியில் கல்லூரி மாணவரை கொன்று புதைத்த நண்பர்கள் - திடுக்கிடும் தகவல்

கள்ளக்குறிச்சியில் கல்லூரி மாணவரை கொன்று புதைத்த நண்பர்கள் - திடுக்கிடும் தகவல்

எழுதியவர் Nivetha P
Mar 27, 2023
06:59 pm

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தின் கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகேயுள்ள மன்ற துணைத்தலைவர் ஜெய்சங்கர். இவரது மகன் ஜெகன்ஸ்ரீ, அருகிலுள்ள தனியார் கல்லூரியில் படித்துவந்துள்ளார். உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் கடந்த வாரம் முழுவதும் கல்லூரிக்கு போகாதஇவர் நேற்று முன்தினம் வெளியில் சென்றுவிட்டு வருவதாக கூறிச்சென்றுள்ளார். ஆனால் அவர் வீடு திரும்பவில்லை என்பதால் அவரது குடும்பத்தார் காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார்கள். அந்த புகாரின்பேரில், வரஞ்சரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்கள். அப்போது ஜெகனின் மொபைல்போன் எண்ணை வைத்து தேடியதில் அவரது நம்பர் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. அது ஸ்விட்ச்ஆப் செய்த அதே பகுதியில் ஜெகனின் நான்கு நண்பர்களின் போனும் சுவிட்ச்ஆப் செய்யப்பட்டுள்ளது. இதனால் சந்தேகமடைந்த போலீசார் ஜெகனின் நெருங்கிய நண்பர்களான ஐயப்பன் உள்பட 4 பேரையும் பிடித்து விசாரணைசெய்துள்ளனர்.

தீவிர விசாரணை

சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய போலீசார்

அவர்களை பிடித்து விசாரித்ததில் ஜெகனுக்கும் ஐயப்பனுக்கும் ஏற்கனவே முன்விரோதம் உள்ளதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் மது அருந்த ஜெகனை அழைத்து கொண்டு இவர்கள் 4 பேரும் கூத்தக்குடி வனப்பகுதிக்கு சென்றுள்ளனர். அங்கு ஜெகனுக்கு போதை அதிகமான பின்னர் மற்ற நான்கு பேரும் சேர்ந்து ஜெகனை மது பாட்டிலை கொண்டு குத்தி கொலை செய்துள்ளார்கள். பின்னர் சடலத்தை வனப்பகுதிலேயே தோண்டி புதைத்ததாக போலீசாரிடம் அந்த நான்கு பேரும் வாக்குமூலம் கொடுத்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், சடலத்தை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதனை தொடர்ந்து போலீசார் ஐயப்பன் உள்பட 4 பேரையும் மிக தீவிரமாக விசாரித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.