Page Loader
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் - பணியாளர்களை பாராட்டிய முதல்வர் 
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் - பணியாளர்களை பாராட்டிய முதல்வர்

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் - பணியாளர்களை பாராட்டிய முதல்வர் 

எழுதியவர் Nivetha P
Sep 16, 2023
12:02 pm

செய்தி முன்னோட்டம்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தினை காஞ்சிபுரத்தில் நேற்று(செப்.,15)துவக்கி வைத்தார். இந்த திட்டத்தின் மூலம் 1 கோடியே 6 லட்சத்தி 50 ஆயிரம் குடும்ப தலைவிகள் மாதந்தோறும் ரூ.1000 பெறவுள்ளனர். ஒவ்வொரு மாதமும் 15ம்தேதி இந்த பணமானது அவர்களது வங்கிக்கணக்கில் டெபாசிட் செய்யப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் முதல்வர் தனது எக்ஸ் ட்விட்டர் பக்கத்தில், "மிக குறுகிய காலத்தில் இந்த கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தினை செயல்படுத்த அயராது உழைத்த அனைவருக்கும் இந்த தருணத்தில் எனது பாராட்டுக்களை தெரிவித்து மகிழ்கிறேன்" என்று பதிவு செய்துள்ளார். மேலும் அவர்,"களப்பணியாளர்களை சிறப்பாக வழிநடத்திய மாவட்ட ஆட்சியர்கள், தலைமை செயலாளர்கள் என அனைத்து தலைமை அலுவலர்களுக்கும் எனது நன்றிகள்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

முதல்வரின் பதிவு