LOADING...
நாட்டின் 53வது தலைமை நீதிபதியாக சூர்யா காந்தை நியமனம் செய்தார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு
நாட்டின் 53வது தலைமை நீதிபதியாக சூர்யா காந்தை நியமனம் செய்தார் குடியரசுத் தலைவர்

நாட்டின் 53வது தலைமை நீதிபதியாக சூர்யா காந்தை நியமனம் செய்தார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

எழுதியவர் Sekar Chinnappan
Oct 30, 2025
06:54 pm

செய்தி முன்னோட்டம்

இந்திய உச்ச நீதிமன்றத்தின் அடுத்தத் தலைமை நீதிபதியாக நீதிபதி சூர்யா காந்த் அவர்களைக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நியமித்துள்ளதாக மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் வியாழக்கிழமை (அக்டோபர் 30) அன்று அறிவித்தார். இவர் தற்போதைய தலைமை நீதிபதி பூஷன் ராமகிருஷ்ணா கவாய் நவம்பர் 23 அன்று ஓய்வு பெற்ற பிறகு, நவம்பர் 24, 2025 அன்று நாட்டின் 53வது தலைமை நீதிபதியாகப் பதவியேற்பார். இவரது பதவிக் காலம் 15 மாதங்கள் நீடிக்கும். அதாவது பிப்ரவரி 9, 2027 வரை இந்தப் பொறுப்பில் இருப்பார். ஹரியானாவின் ஹிஸ்ஸாரில் பிப்ரவரி 10, 1962 இல் பிறந்த நீதிபதி சூர்யா காந்த், மே 24, 2019 அன்று உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பதவியேற்றார்.

வழக்குகள்

முக்கிய வழக்குகள்

நீதிபதி சூர்யா காந்த் ஷரத்து 370 நீக்கம், பேச்சு சுதந்திரம், பாலின சமத்துவம், ஊழல் மற்றும் சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல முக்கியத் தீர்ப்புகளை வழங்கிய அமர்வுகளில் அங்கம் வகித்துள்ளார். மேலும், காலனித்துவ காலத்தில் கொண்டுவரப்பட்ட தேசத்துரோகச் சட்டத்தை நிறுத்தி வைக்க உத்தரவிட்ட அமர்விலும் இவர் ஒரு பகுதியாக இருந்தார். உச்ச நீதிமன்ற பார் அசோசியேஷன் உட்படப் பார் அசோசியேஷன் இருக்கைகளில் மூன்றில் ஒரு பங்கு இடங்களைப் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யுமாறு உத்தரவிட்டதன் மூலம் இவர் வரலாற்றில் இடம் பிடித்தார். பிரதமர் மோடியின் 2022 பஞ்சாப் பயணத்தின்போது ஏற்பட்ட பாதுகாப்புக் குறைபாட்டை விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிபதி இந்து மல்ஹோத்ரா தலைமையிலான குழுவின் அமர்விலும் இவர் அங்கம் வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.