JEE மெயின் முடிவுகள் 2023: பெண்கள் யாரும் 100 மதிப்பெண் வாங்கவில்லை
ஜனவரி 2023இல் நடைபெற்ற JEE மெயின் அமர்வுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டது. தேசிய தேர்வு முகமை(NTA) வெளியிட்ட தரவுகளின்படி, இந்த அமர்வில் 20 மாணவர்கள் 100 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். ஆனால், 100 சதவீதம் எடுத்தவர்களின் பட்டியலில் மாணவிகள் யாரும் இடம்பெறவில்லை. JEE மெயின் முதலாம் தாளுக்கு 2.4 லட்சத்துக்கும் அதிகமான பெண்கள் தேர்வு எழுதினர். இதில் மீஸ்லா பிரணதி ஸ்ரீஜா என்ற பெண் 99.99 சதவீத மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்துள்ளார். 10 மாணவிகள் 99 NTA மதிப்பெண் பெற்றுள்ளனர். JEE மெயின் முடிவுகளை இன்று(பிப் 7) NTA அதன் அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிட்டது. NTAவின் இணையதளத்திற்கு செல்ல இங்கு கிளிக் செய்யவும்.
பெண்கள் மற்றும் ஆண்கள் பிரிவில் முதல் இடங்களை பிடித்தவர்கள்
முதலாம் தாள் மற்றும் இரண்டாம் தாளுக்கான முடிவுகள் அந்த இணையதளத்தில் கிடைக்கும். தேர்வு முடிவுகளை பெற விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிட வேண்டும். 2023ஆம் ஆண்டுக்கான JEE மெயின் தேர்வை 8,23,967 மாணவர்கள் எழுதினர். மொத்த மாணவர்களின் வருகை 95.80 சதவீதமாக பதிவாகி இருந்தது. அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, அபினீத் மஜெட்டி, அமோக் ஜலான், அபூர்வ சமோட்டா, ஆஷிக் ஸ்டெனி, பிக்கினா அபினவ் சவுத்ரி, தேஷ்னக் சஞ்சய் ஜெயின், தியானேஷ் ஹேமேந்திர ஷிண்டே மற்றும் பலர் ஆண்கள் பிரிவில் டாப்பர்களாக வந்திருந்தனர். மீஸ்லா பிரணதி ஸ்ரீஜா ரமிரெட்டி மேகனா, மேதா பவன் கிரிஷ், சீமலா வர்ஷா மற்றும் பலர் பெண்கள் பிரிவில் முதல் இடங்களை பெற்றிந்தனர்.