Page Loader
சிறையில் உள்ள ஜம்மு காஷ்மீர் எம்பி ரஷீத் பதவிப் பிரமாணம் செய்யலாம்: என்ஐஏ

சிறையில் உள்ள ஜம்மு காஷ்மீர் எம்பி ரஷீத் பதவிப் பிரமாணம் செய்யலாம்: என்ஐஏ

எழுதியவர் Sindhuja SM
Jul 01, 2024
01:28 pm

செய்தி முன்னோட்டம்

சிறையில் அடைக்கப்பட்டுள்ள காஷ்மீர் தலைவர் பொறியாளர் அப்துல் ரஷீத் ஷேக் எம்.பி.யாக பதவிப் பிரமாணம் செய்ய பயங்கரவாத எதிர்ப்பு அமைப்பு என்ஐஏ ஒப்புதல் அளித்துள்ளது. இந்த விவகாரம் குறித்து டெல்லி நீதிமன்றம் இறுதி உத்தரவு வழங்கியதும் இது நிறைவேற்றப்படும். அவர் பதவியேற்பதற்கான நிபந்தனைகள் குறித்து டெல்லி நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொறியாளர் ரஷீத் என்று அழைக்கப்படும் அப்துல் ரஷீத் ஷேக், சமீபத்திய மக்களவைத் தேர்தலில் பாரமுல்லா தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் 2019 முதல் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா 

சிறையில் இருந்தபடி ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரை தோற்கடித்த ரஷீத்

பயங்கரவதிகளுக்கு நிதியுதவி செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டதை அடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், தடுப்புக்காவலில் இருந்த போதிலும், இந்த மக்களவை தேர்தலில் அவர் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லாவை 2 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றார். கடந்த சனிக்கிழமையன்று, ரஷீத்தின் பதவிப் பிரமாணத்தை எளிதாக்குவதற்காக அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரிய விண்ணப்பத்திற்கு பதிலளிக்குமாறு கூடுதல் செஷன்ஸ் நீதிபதி கிரண் குப்தா, என்ஐஏ-வுக்கு உத்தரவிட்டார். ஜூலை 1ம் தேதிக்குள் பயங்கரவாத தடுப்பு முகமை பதில் அளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், இன்று அதற்கு என்ஐஏ பதிலளித்துள்ளது.