மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் வருமான வரித்துறை சோதனை
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாடு மின்சாரத்துறை மற்றும் ஆயத்தீர்வை அமைச்சர் செந்தில் பாலாஜி சம்மந்தப்பட்ட 40 இடங்களில் இன்று அதிகாலை முதல் வருமான வரித்துறை ரெய்டு நடைபெற்று வருகிறது.
அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆட்சி காலத்தில் அதிமுக கட்சியில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அப்போது, வேலை வாங்கி தருவதாக பணம் பெற்று கொண்டதற்கான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருவதும் குறிப்பிட வேண்டியது.
இந்நிலையில், இன்று அதிகாலை முதல், கரூர், ரமேஸ்வரப்பட்டியில் இருக்கும் செந்தில் பாலாஜியின் பெற்றோர் வீடு, மற்றும் கரூர், ராமகிருஷ்ணாபுரத்தில் உள்ள அவரது சகோதரர் வீடு மற்றும் சென்னையில் உள்ள அவர் சம்மந்தப்பட்ட இடங்கள் என 40 இடங்களில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ட்விட்டர் அஞ்சல்
அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் IT சோதனை
#BREAKING | செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் ரெய்டு #SenthilBalaji #ITRaid #LatestNews pic.twitter.com/Kl1IlHFqdK
— News18 Tamil Nadu (@News18TamilNadu) May 26, 2023