'மகளிர் இடஒதுக்கீடு மசோதா எங்களுடையது': சோனியா காந்தி
மகளிர் இடஒதுக்கீடு மசோதா எங்களுடையது என்று காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சி நீண்டகாலமாக இந்த மசோதா குறித்த கோரிக்கையை எழுப்பி வரும் நிலையில், இந்த நடவடிக்கையை வரவேற்பதாக காங்கிரஸ் நேற்று தெரிவித்தது. இன்று நாடாளுமன்றத்திற்குள் சோனியா காந்தி நுழையும் போது, இந்த மசோதா பற்றி செய்தியாளர்கள் அவரிடம் கேட்டனர். அதற்கு பதிலளித்த அவர், "அது எங்களுடையது" என்று கூறியுள்ளார். இது குறித்து நேற்று ட்வீட் செய்திருந்த முன்னாள் நிதியமைச்சர் பா சிதம்பரம், பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டால் அது காங்கிரேஸின் வெற்றி என்று தெரிவித்திருந்தார்.
2010ஆம் ஆண்டியிலேயே ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்ட மகளிர் இடஒதுக்கீடு மசோதா
"நாளை மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை அரசு கொண்டுவந்தால், அது காங்கிரஸ் மற்றும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி கட்சிகளுக்குக் கிடைத்த வெற்றியாகும். 9-3-2010அன்று, அதாவது UPA அரசாங்கத்தின் போது, ராஜ்யசபாவில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது என்பதை நினைவில் கொள்க." என்று பா சிதம்பரம் ட்விட்டரில் கூறியிருந்தார். காங்கிரஸ் ஆட்சியின் போது, 2010இல் இந்த மசோதா ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டது. ஆனால், மக்களவையில் இதை அப்போது நிறைவேற்ற முடியவில்லை. இந்நிலையில், நேற்று பாஜகவின் மத்திய அமைச்சரவை இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தது. இதனையடுத்து, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி "காங்கிரஸ் நிபந்தனையற்ற ஆதரவை வழங்குகிறது" என்று ட்விட்டரில் இதற்கு ஆதரவு தெரிவித்தார்.