Page Loader
தட்கல் ரயில் டிக்கெட் முன்பதிவு நேரம் மாற்றமா? IRCTC வெளியிட்ட விளக்கம்
சமூக வலைதளங்களில் பரவும் செய்திகள் பொய்யானவை என IRCTC தெரிவித்துள்ளது

தட்கல் ரயில் டிக்கெட் முன்பதிவு நேரம் மாற்றமா? IRCTC வெளியிட்ட விளக்கம்

எழுதியவர் Venkatalakshmi V
Apr 11, 2025
06:32 pm

செய்தி முன்னோட்டம்

தட்கல் மற்றும் பிரீமியம் தட்கல் டிக்கெட்டுகளுக்கான முன்பதிவு நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் பரவும் செய்திகள் பொய்யானவை என இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (IRCTC) தெரிவித்துள்ளது. IRCTC எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "ஏசி மற்றும் ஏசி அல்லாத வகுப்புகளுக்கான தட்கல் மற்றும் பிரீமியம் தட்கல் முன்பதிவு நேரங்களில் எந்தவொரு மாற்றமும் செய்யப்பட்டதில்லை. தற்போதைய முன்பதிவு நேரங்கள் மாறாமல் தொடருகின்றன" என குறிப்பிடப்பட்டுள்ளது. அறிவிப்பின் படி, தட்கல் டிக்கெட் முன்பதிவு பயண தினதன்று, AC வகுப்புகளுக்கு 10 மணிக்கும், Non-AC வகுப்புகளுக்கு 11 மணிக்கும் துவங்கும். ஒரு நேரத்தில் 4 பயணிகள் வரை முன்பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post