அடுத்த செய்திக் கட்டுரை

திரையரங்கில் லேப்டாப்பில் வேலை செய்த நபர் - வைரலாகும் வீடியோ!
எழுதியவர்
Siranjeevi
Apr 26, 2023
04:51 pm
செய்தி முன்னோட்டம்
இன்றைய நவீன காலக்கட்டத்தில் ஸ்மார்ட்போன், லேப்டாப் பயன்பாடு மக்களிடையே அதிகரித்துள்ளது.
அனைத்து வேலைகளையும் இருந்தே இடத்தில் இருந்தே செய்ய இவை உதவியாக உள்ளது.
கொரோனா காலக்கட்டத்திற்கு பின் பல ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியை தொடர்ந்தனர். கொரோனா குறைந்தாலும் ஒரு சில நிறுவனங்கள் வீட்டிலிருந்து பணிசெய்ய அனுமதிக்கிறது.
அந்த வகையில், திரையரங்கில் படம் பார்க்க சென்ற நபர் ஒருவர் அங்கு லேப்டாப்பை எடுத்து வேலை செய்யும் காட்சி சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.
ஏப்ரல் 10 ஆம் தேதி இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட இந்த வீடியோ பெங்களூருவில் இருந்து எடுக்கப்பட்டதாகவும், இதுவரை 6 லட்சம் அதிகமானோர் கண்டு பகிர்ந்து வருகின்றனர்.