Page Loader
இதுவரை 27 இடங்களில் வெற்றி; மிசோரத்தில் புதிய ஆட்சியை அமைக்க உள்ளது ZPM 
ZPM ஏற்கனவே 27 இடங்களை வென்றுவிட்டது.

இதுவரை 27 இடங்களில் வெற்றி; மிசோரத்தில் புதிய ஆட்சியை அமைக்க உள்ளது ZPM 

எழுதியவர் Sindhuja SM
Dec 04, 2023
02:05 pm

செய்தி முன்னோட்டம்

மிசோரம் சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அம்மாநிலத்தின் எதிர்க்கட்சியான ஜோரம் மக்கள் இயக்கம்(ZPM) அடுத்த ஆட்சியை அமைக்க உள்ளது. 2 மணி நிலவரப்படி, வாக்குகள் தொடர்ந்து எண்ணப்பட்டு வந்தாலும், ZPM ஏற்கனவே 27 இடங்களை வென்று, ஆளும் மிசோ தேசிய முன்னணியை(MNF) தோற்கடித்துள்ளது. 40 தொகுதிகளை கொண்ட மிசோரம் சட்டமன்றத்தில் 21 இடங்களை ஒரு கட்சி வென்றால், அக்கட்சி கூட்டணி எதுவும் இல்லாமல் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கலாம். அதன் படி பார்த்தால், ZPM ஏற்கனவே 27 இடங்களை வென்று, ஆட்சியை கைப்பற்றிவிட்டது. தற்போதைய ஆளும் கட்சியான MNF கட்சி 7 இடங்களில் வெற்றி பெற்று, 3 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

வ்கேஜ்ஜின்

மிசோரத்தின் அடுத்த முதல்வர் யார்?

அது போக, பாஜக 3 இடங்களில் வென்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 1 தொகுதியில் வெற்றிபெற்றுள்ளது, இதனையடுத்து, ZPM கட்சி தலைவர் லால்துஹோமா அடுத்த முதல்வராக பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்பு ஐபிஎஸ் அதிகாரியாக இருந்த லால்துஹோமா(74), முதன் முதலில் கோவாவில் பதவியேற்றார். பின்னர் புது டெல்லிக்கு மாற்றப்பட்டு, அங்கு அவர் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியின் பாதுகாப்புப் பொறுப்பாளராக பணியாற்றி வந்தார். பின்பு, 1984இல் காங்கிரஸ் கட்சி சார்பாக மிசோரத்தில் போட்டியிட்டு, நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார். அவர் பின்னர் 1997இல் சோரம் தேசியவாதக் கட்சியை(ZNP) நிறுவினார். மிசோரம் அரசியலில் மிக முக்கிய பங்கு வகிக்கும் கட்சியாக இது தற்போது மாறியுள்ளது.