
நேஷனல் ஜியோகிரபிக்ஸ் நடத்திய புகைப்பட போட்டியில் வென்ற இந்திய வம்சாவளி பொறியாளர்
செய்தி முன்னோட்டம்
நேஷனல் ஜியோகிராபிக் நிறுவனம் 'ஆண்டிற்கான புகைப்படங்கள்' என்னும் போட்டியை நடத்தியது ட்ரெண்டாகியுள்ளது.
இந்தப்போட்டியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த மென்பொருள் பொறியாளராக பணிபுரியும் கார்த்திக் சுப்பிரமணியம் வென்றுள்ளார்.
இவர் தனது பொழுதுபோக்காக புகைப்படம் எடுப்பதை வழக்கமாக வைத்திருப்பவர்.
தொற்றுநோய் பரவிய காலங்களில் கலிபோர்னியாவின் சான் ப்ரான்சிஸ்க்கோவில் உள்ள தனது வீட்டில் இருந்தபடி 2020ம்ஆண்டு முதல் அவர் பொழுதுபோக்காக தனது கேமராமூலம் புகைப்படங்களை எடுக்கததுவங்கியுள்ளார்.
3ஆண்டுகளுக்கு பிறகு இவரது புகைப்படங்கள் நான்கு வகைகளின் கீழ் பதிவிடப்பட்டு 5000 உள்ளீடுகளை முறியடித்து முதலிடத்தினை பிடித்து வெற்றி பெற்றுள்ளார்.
இவரது புகைப்படங்கள் இயற்கை, மக்கள், இடங்கள் மற்றும் விலங்குகள் ஆகிய வகைகளின்கீழ் இடம்பிடித்துள்ளது.
கார்த்திக் சுப்பிரமணியம் தனது புகைப்படத்துக்கு 'டான்ஸ் ஆப் தி ஈகிள்ஸ்' என்று பெயரிடப்பட்டு சமர்ப்பித்துள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
நேஷனல் ஜியோகிரபிக்ஸ் நடத்திய போட்டியில் வென்ற இந்திய வம்சாவளி பொறியாளர்
This striking image won our ‘Pictures of the Year’ photo contest - National Geographic https://t.co/pm6OosViNN pic.twitter.com/gyHcYphcS4
— 🇺🇦Evan Kirstel #B2B #TechFluencer (@EvanKirstel) February 18, 2023