இந்தியாவின் மிக நீளமான கண்ணாடி பாலம் - கேரளாவில் திறப்பு
கேரளா மாநிலம் சுற்றுலா பயணிகளை கவரும் வண்ணம் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் ஒன்று தான் இந்த கண்ணாடி பாலம். இப்பாலமானது இடுக்கி மாவட்டம்-வாகமண் பகுதியில் தனியார் தொழில் முனைவோர்களுடன் இணைந்து மாநில அரசு கட்டியுள்ளது. ரூ.3கோடி செலவில் 120அடி நீளத்தில் 5அடுக்கு கண்ணாடிகள் கொண்டு அமைக்கப்பட்டுள்ள இந்த கண்ணாடி பாலம் கடல் மட்டத்திலிருந்து சுமார் 3,600அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ளது. இந்தியாவின் மிக நீளமான கண்ணாடி பாலம் என்னும் பெருமையினை பெற்றுள்ள இந்த சுற்றுலா தளத்தினை கேரளா சுற்றுலா மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சரான முகம்மது ரியாஸ் இன்று(செப்.,7)திறந்து வைத்துள்ளார். இந்த பாலத்தில் ஒரேநேரத்தில் கிட்டத்தட்ட 30 பேர் வரை நடக்கலாம் என்றும், இதற்காக ஓர்நபருக்கு ரூ.500 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது என்றும் கூறப்பட்டுள்ளது.