இந்தியாவிலேயே மிக நீளமான ஒரு சுரங்கப்பாதை ஜம்மு காஷ்மீரில்!
இந்தியாவிலேயே மிக நீளமான ஒரு சுரங்கப்பாதையை இந்திய ரயில்வே ஜம்மு காஷ்மீரில் கட்டியுள்ளது. உதம்பூர் ஸ்ரீநகரில் அமைந்துள்ள பனிஹால்-கத்ரா ரயில் பாதையில் 12.8 கிமீ நீளத்தில் இந்த சுரங்கப்பாதைக் கட்டப்பட்டுள்ளது. இந்த சுரங்கப்பாதைக் கட்டி முடிப்பது பெரும் சவாலாக இருந்தது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவசரகாலத்தில் மீட்புப் பணியை எளிதாக்கும் வகையில் இந்த சுரங்கபாதையான 'டி-49' கட்டப்பட்டுள்ளது. இது பனிஹால் பாதையில் கட்டப்பட்டிருக்கும் நாலாவது சுரங்கபாதையாகும்.
இந்த சுரங்கபாதைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்:
செனாப் ஆற்றின் பல்வேறு பிரிவுகளான , கோடா, ஹிங்கினி, குந்தன்நல்லா போன்ற பல்வேறு சிறப்புமிக்க பகுதிகளும் வடிகால்களும் இந்த பாதையில் இருக்கிறது. இமயமலையின் ராம்பன் உருவாக்கம் பகுதியையும் இந்த பாதை கடந்து செல்கிறது. இந்த ஆண்டு ஜனவரி மாதம் இன்னொரு சுரங்கபாதையும் இதே வழியில் கட்டி முடிக்கப்பட்டது. அதன் நீளம் 12.75 கி.மீ. இதை கட்டுவதற்கு ஆஸ்திரேலியாவின் புதிய சுரங்கப்பாதை அமைக்கும் முறையான NATM முறையைப் பின் பற்றி உள்ளனர். குதிரை லாடத்தின் வடிவத்தில் இருக்கும் இந்த சுரங்கப்பாதை சம்பர் ஸ்டேஷனையும் T-50 சுரங்கப்பாதையையும் இணைக்கிறது. இதன் தெற்கு முனையின் உயரம் தோராயமாக 1400.5 மீட்டர் மற்றும் வடக்கு முனையின் உயரம் 1558.84 மீட்டர்களாகும்.