NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இந்தியாவில் ஒரே நாளில் 5,880 கொரோனா பாதிப்பு: 14 பேர் உயிரிழப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியாவில் ஒரே நாளில் 5,880 கொரோனா பாதிப்பு: 14 பேர் உயிரிழப்பு
    இதுவரை, இந்தியாவில் 4.47 கோடி(4,47,62,496) கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.

    இந்தியாவில் ஒரே நாளில் 5,880 கொரோனா பாதிப்பு: 14 பேர் உயிரிழப்பு

    எழுதியவர் Sindhuja SM
    Apr 10, 2023
    12:21 pm

    செய்தி முன்னோட்டம்

    நேற்று(ஏப்-7) 5,357ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 5,880ஆக அதிகரித்துள்ளது.

    நாட்டின் செயலில் உள்ள கொரோனா 35,199 ஆக உயர்ந்துள்ளது. இது மொத்த தொற்றுநோய்களில் 0.08 சதவீதமாகும்.

    இதுவரை, இந்தியாவில் 4.47 கோடி(4,47,62,496) கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.

    கொரோனாவால் இதுவரை ஏற்பட்ட உயிரிழப்புகள் 5,30,979 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரதத்தில் மட்டும் 14 இறப்புகள் பதிவாகியுள்ளன.

    கொரோனா வேகமாக அதிகரித்து வரும் நிலையில், இன்று மற்றும் நாளை மாநிலங்கள் அனைத்திலும் உள்ள மருத்துவமனைகளில் கொரோனா ஒத்திகை பயிற்சி நடத்தபட வேண்டும் என்று மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா உத்தரவிட்டுள்ளார்.

    இந்தியா

    கொரோனா பாதிப்புகள் மற்றும் தடுப்பூசிகளின் புள்ளிவிவரங்கள்

    கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,41,96,318ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரதத்தில் மட்டும் 3,253 பேர் குணமடைந்துள்ளனர்.

    தினசரி கொரோனா நேர்மறை விகிதம் 6.91 சதவீதமாகவும், வாராந்திர நேர்மறை விகிதம் 3.67 சதவீதமாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    தேசிய கொரோனா மீட்பு விகிதம் 98.75 சதவீதமாகவும், இறப்பு விகிதம் 1.19 சதவீதமாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    கடந்த 24 மணி நேரத்தில் 85,076 கொரோனா சோதனைகள் நடத்தப்பட்டுள்ளது.

    இதுவரை 220,66,23,527 கோவிட் தடுப்பூசிகள் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சகத்தின் இணையதள தரவுகள் கூறுகின்றன. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 205 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    கொரோனா

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    இந்தியா

    முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஏகே ஆண்டனியின் மகன் அனில் ஆண்டனி பாஜகவில் சேர்ந்தார் பாஜக
    சென்னை விமான நிலையத்தின் புதிய டெர்மினலைப் பிரதமர் மோடி சனிக்கிழமை திறந்து வைக்கிறார் சென்னை
    RSS, மகாத்மா காந்தி பற்றிய விவரங்கள் பள்ளி புத்தங்கங்களில் இருந்து நீக்கப்பட்டதா ஆர்எஸ்எஸ்
    ஆதாரை வாக்காளர் அட்டையுடன் இணைக்காதவர்களின் பெயர் நீக்கப்படாது - கிரண் ரிஜிஜு ஆதார் புதுப்பிப்பு

    கொரோனா

    இந்தியாவில் ஒரே நாளில் 754 புதிய கொரோனா பாதிப்புகள் இந்தியா
    சளி, காய்ச்சல், உடல் அசதியா? உங்களுக்கு வந்திருப்பது, கோவிட் தொற்றா அல்லது H3N2 தொற்றா என எப்படி கண்டறியலாம்? நோய்கள்
    ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு கொரோனா உறுதி - மருத்துவமனை அறிக்கை ஈரோடு
    இந்தியாவில் வேகமாக அதிகரிக்கும் கொரோனா: ஒரே நாளில் 1,134 பாதிப்புகள் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025