LOADING...
இந்தியாவின் முதல் டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பு இன்று தொடங்கியது: அசத்தல் சிறப்பம்சங்கள் - முழு விவரம்!
டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பு இன்று தொடங்கியது

இந்தியாவின் முதல் டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பு இன்று தொடங்கியது: அசத்தல் சிறப்பம்சங்கள் - முழு விவரம்!

எழுதியவர் Venkatalakshmi V
Apr 01, 2026
11:54 am

செய்தி முன்னோட்டம்

இந்தியாவின் 16-வது மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணி (Census 2027) இன்று (ஏப்ரல் 1) முதல் நாடு முழுவதும் முறைப்படி தொடங்கியுள்ளது. சுதந்திரத்திற்குப் பிந்தைய 8-வது கணக்கெடுப்பான இது, உலகிலேயே மிகப்பெரிய மக்கள் தொகை கணக்கெடுப்புப் பயிற்சியாக கருதப்படுகிறது. குறிப்பாக, இந்திய வரலாற்றிலேயே முதன்முறையாக இந்த முறை டிஜிட்டல் முறையில் தரவுகள் சேகரிக்கப்படவுள்ளது இதன் சிறப்பம்சமாகும்.

டிஜிட்டல் புரட்சி

மொபைல் செயலி மற்றும் சுய-பதிவு

பாரம்பரியமான காகிதப் படிவங்களுக்குப் பதிலாக, இந்த முறை கணக்கெடுப்பாளர்கள் ஸ்மார்ட்போன்களில் உள்ள பிரத்யேக மொபைல் செயலி மூலம் தகவல்களைச் சேகரிப்பார்கள். பொதுமக்கள் தங்களது விவரங்களைச் சமர்ப்பிக்க 'சுய-பதிவு' வசதியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தமிழ், ஆங்கிலம், இந்தி உட்பட 16 மொழிகளில் கிடைக்கும் இணையதளம் வாயிலாக, பொதுமக்கள் தங்கள் மொபைல் எண்ணைப் பயன்படுத்தி வீட்டு விவரங்களைப் பதிவு செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவு செய்பவர்களுக்கு வழங்கப்படும் தனித்துவமான ஐடி-யை கணக்கெடுப்பாளர்கள் வரும்போது பகிர்ந்து கொண்டால் போதுமானது.

விவரங்கள்

முதற்கட்ட கணக்கெடுப்பில் கேட்கப்படும் விவரங்கள்

இன்று தொடங்கியுள்ள முதற்கட்டப் பணியில், வீடுகளின் நிலை மற்றும் வசதிகள் குறித்துக் கவனம் செலுத்தப்படும். கட்டிடப் பொருட்கள், குடியிருப்பாளர்களின் எண்ணிக்கை, குடிநீர் வசதி, மின்சாரம் மற்றும் கழிப்பறை வசதிகள். சமையல் எரிபொருள் வகை, வாகனங்கள், மொபைல் போன்கள் மற்றும் இணையச் சேவை வசதி குறித்த தகவல்கள் சேகரிக்கப்படும். இதற்கான கேள்விகள் ஏற்கனவே 2026 ஜனவரியில் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டுவிட்டன.

Advertisement

அட்டவணை

மாநில வாரியான கால அட்டவணை

இந்தக் கணக்கெடுப்புப் பணி மாநிலங்களுக்கு ஏற்ப வெவ்வேறு காலகட்டங்களில் நடைபெறும்: ஏப்ரல் 16 - மே 15: டெல்லி, கர்நாடகா, ஒடிசா, சிக்கிம், கோவா மற்றும் லட்சத்தீவுகள் உள்ளிட்ட பகுதிகளில் கணக்கெடுப்பு நடைபெறும். (சுய-பதிவு: ஏப்ரல் 1 - ஏப்ரல் 15). மே 1 - மே 30: ஆந்திரப் பிரதேசம், ஹரியானா, மத்தியப் பிரதேசம் மற்றும் சண்டிகர் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும். (சுய-பதிவு: ஏப்ரல் 16 - ஏப்ரல் 30). இரண்டாம் கட்டம் (Phase II): உண்மையான மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் சாதி வாரியான கணக்கெடுப்பு பிப்ரவரி 2027-இல் நடைபெறும். லடாக் போன்ற பனிப்பிரதேசங்களில் செப்டம்பர் 2026-லேயே இது தொடங்கிவிடும்.

Advertisement

உள்கட்டமைப்பு

பிரம்மாண்டமான உள்கட்டமைப்பு மற்றும் செலவு

இந்த மாபெரும் பணிக்காக மத்திய அரசு ₹11,718.24 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது. நாடு முழுவதும் சுமார் 30 லட்சம் கணக்கெடுப்பாளர்கள் மற்றும் அதிகாரிகள் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். தரவுப் பாதுகாப்பு மற்றும் ஊழியர்களுக்கான பயிற்சி ஆகியவற்றிற்குத் தனித்தனியாகப் பெரிய அளவில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. டிஜிட்டல் கருவிகள் மற்றும் நிகழ்நேரக் கண்காணிப்பு மூலம் மேற்கொள்ளப்படும் இந்த 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு, இந்தியாவின் நிர்வாகத் தரவுகளில் ஒரு புதிய மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிறப்பம்சங்கள்

தனித்துவமாக்கும் 5 முக்கியக் காரணங்கள்

1. சுய-பதிவு வசதி: பொதுமக்கள் தங்கள் வசதிக்கேற்ப, தங்களது மொபைல் எண்களைப் பயன்படுத்தி இணையதளம் வாயிலாகத் தங்களின் விவரங்களை ஆன்லைனிலேயே பதிவு செய்து கொள்ளலாம். 2. 16 மொழிகளில் மொபைல் செயலிகள்: சுமார் 30 லட்சம் கணக்கெடுப்பாளர்கள், தமிழ் உட்பட 16 மொழிகளில் கிடைக்கும் ஆண்ட்ராய்டு மற்றும் iOS தளங்களில் இயங்கும் பிரத்யேக மொபைல் செயலியைப் பயன்படுத்துவார்கள். 3. ஜியோ-டேக்கிங் 4. "பிரகதி" மற்றும் "விகாஸ்": மக்களிடையே கணக்கெடுப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த 'பிரகதி'(பெண் கணக்கெடுப்பாளர்) மற்றும் 'விகாஸ்'(ஆண் கணக்கெடுப்பாளர்) ஆகிய இரு உருவச் சின்னங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. 5. புதிய சமூக மாற்றங்களுக்கான அங்கீகாரம்: Live-in தம்பதியினர், தங்கள் உறவை நிலையானது என்று கருதினால், கணக்கெடுப்பின் போது அவர்கள் திருமணமான தம்பதியராகவே கருதப்படுவார்கள்.

Advertisement