
சீன ஊடுருவலைத் தடுக்க 4 முக்கிய அமைப்புகள்!
செய்தி முன்னோட்டம்
கடந்த வாரம் டிசம்பர் 9ஆம் தேதி சீன படையினர் 400 பேர் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்தனர்.
அருணாச்சல் மாநிலத்தின் தவாங் என்ற பகுதியில் இந்த சம்பவம் நடந்தது. இப்படி அத்துமீறி நுழைந்தவர்களை இந்திய ராணுவத்தினர் விரட்டி அடித்தனர்.
இந்த சம்பவத்திற்கு பின், இந்திய- சீன எல்லையில் காவல் பலப்படுத்தப்பட்டு வருகிறது.
இதே போல், 2017ஆம் ஆண்டிலும் சீனர்கள் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த சம்பவம் ஒன்று நடந்தது. அப்போது, இந்திய பகுதியான டோக்லாத்தில் சீனர்கள் சாலை அமைக்க முயன்றனர்.
இது போன்ற சம்பவங்களைத் தடுக்கவும் எல்லைப் பாதுகாப்பைக் மேம்படுத்தவும் சுரங்கப் பாதைகள், ரயில் பாதைகள், நெடுஞ்சாலைகள், ரஃபேல் விமானம் ஆகிய நான்கு முக்கிய கட்டமைப்புகளை இந்தியா அமைத்து வருகிறது.
பாதுகாப்பு
இந்தியா உருவாக்கும் 4 முக்கிய கட்டமைப்புகள்!
சுரங்கப் பாதைகள்:
அருணாச்சலில் இருக்கும் தவாங் பகுதிக்கு பனி காலத்திலும் எளிதாக செல்வதற்கான சுரங்க பாதைகள் அமைக்கப்பட்டு வருகிறது. இதன் கட்டுமான பணிகள் அடுத்த மாதம் நிறைவடைந்துவிடும்.
மேலும், சேலா கணவாய் என்ற பகுதியிலும் ஒரு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வருகிறது.
நெடுஞ்சாலை:
2000 கிமீ நெடுஞ்சாலை ஒன்று அருணாச்சலில் இதற்காக கட்டப்பட்டு வருகிறது. இது தவாங்கையும் கானுபாரியையும் இணைக்கிறது. இது 2024ஆம் ஆண்டு கட்டிமுடிக்கப்படும்.
ரயில் பாதை:
மேற்கு வங்கத்தில் எல்லைப் பாதுகாப்பிற்காக சிக்கிம்-சிவோக் இடையே 45கிமீ நீளத்திற்கு ஒரு ரயில் பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இது அடுத்த ஆண்டுக்குள் நிறைவடையும்.
ரஃபேல் போர் விமானங்கள்:
பூட்டான் எல்லை அருகே மேற்கு வங்க மாநிலத்தில் புதிதாக வாங்கப்பட்ட ரஃபேல் போர் விமானங்களும் நிறுத்தப்பட்டுள்ளது.