NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இடைத்தேர்தல்கள்: காங்கிரஸ் கூட்டணி 10 இடங்களிலும், பாஜக 2 இடங்களிலும் வெற்றி 
    அடுத்த செய்திக் கட்டுரை
    இடைத்தேர்தல்கள்: காங்கிரஸ் கூட்டணி 10 இடங்களிலும், பாஜக 2 இடங்களிலும் வெற்றி 

    இடைத்தேர்தல்கள்: காங்கிரஸ் கூட்டணி 10 இடங்களிலும், பாஜக 2 இடங்களிலும் வெற்றி 

    எழுதியவர் Sindhuja SM
    Jul 13, 2024
    05:36 pm

    செய்தி முன்னோட்டம்

    ஏழு மாநிலங்களில் உள்ள 13 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்ற நிலையில், எதிர்க்கட்சிகளுக்கு பெரும் வெற்றியாக, இண்டியா கூட்டணி கட்சிகள் 10 இடங்களைக் கைப்பற்றின. பாரதிய ஜனதா கட்சி (பாஜக) இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றது.

    ஜூலை 10-ம் தேதி தேர்தல் நடந்த சட்டசபை தொகுதிகளில், ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள டேரா மற்றும் நலகர் தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. ஆனால் ஹமிர்பூரில் காங்கிரஸ் பாஜகவிடம் தோல்வியடைந்தது.

    டெஹ்ராவில், காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட முதல்வர் சுக்விந்தர் சிங் சுகுவின் மனைவி கமலேஷ் தாக்கூர், பாஜகவின் ஹோஷியார் சிங்கை எதிர்த்து 9,399 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

    இந்தியா 

    2 தொகுதிகளில் பாஜக வெற்றி 

    நலகர் தொகுதியில் காங்கிரஸின் ஹர்தீப் சிங் பாவா 8,990 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவின் கே.எல்.தாக்குரை தோற்கடித்தார்.

    ஆனால், ஹமிர்பூர் தொகுதியில் போட்டியிட்ட பாஜக தலைவர் ஆஷிஷ் சர்மா, காங்கிரஸ் தலைவர் புஷ்பிந்தர் வர்மாவை 1,571 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

    உத்தரகாண்டில் இரண்டு இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸின் லக்பத் சிங் புடோலா பத்ரிநாத் தொகுதியில் பாஜகவின் ராஜேந்திர சிங் பண்டாரியை 5,224 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

    மங்களூர் தொகுதியில் பாஜகவின் கர்தார் சிங் பதானாவை 422 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் தலைவர் காசி முகமது நிஜாமுதீன் தோற்கடித்தார்.

    பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மேற்கு தொகுதியில் ஆம் ஆத்மி கட்சியின் மொஹிந்தர் பகத் 23,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

    இந்தியா 

    ஒரு தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் வெற்றி 

    மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் 4 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

    அதன் வேட்பாளர்களான கிருஷ்ண கல்யாணி ராய்கஞ்சிலும், முகுத் மணி அதிகாரி ரணகாட் தக்ஷிலும், மதுபர்ணா தாக்கூர் பாக்தாவிலும், சுப்தி பாண்டே மணிக்தலாவிலும் வெற்றி பெற்றனர்.

    இதற்கிடையில், தமிழகத்தின் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியில் திமுக தலைவர் அன்னியூர் சிவா வெற்றி பெற்றார்.

    மத்தியப் பிரதேசத்தில் உள்ள அமர்வாரா தொகுதியிலும் பாஜக வெற்றி பெற்றது. அங்கு போட்டியிட்ட பாஜக வேட்பாளர் கமலேஷ் பிரதாப் ஷா காங்கிரஸ் கட்சியின் தீரன் ஷாவை 3,027 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

    பீகாரின் ருபாலி தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் சங்கர் சிங் 8,246 வாக்குகள் வித்தியாசத்தில் ஐக்கிய ஜனதா தளம் வேட்பாளரை தோற்கடித்தார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இடைத்தேர்தல்
    காங்கிரஸ்
    பாஜக
    திமுக

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    இடைத்தேர்தல்

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான பார்வையாளர்கள் நியமனம் ஈரோடு
    ஈரோடு இடைதேர்தலில் அதிமுக சார்பில் தென்னரசு போட்டி - ஈபிஎஸ் அறிவிப்பு ஈரோடு
    ஈரோடு இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பதவியேற்பு ஈரோடு
    அருந்ததியர் இன மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கு - சீமானுக்கு சம்மன் நாம் தமிழர்

    காங்கிரஸ்

     அத்துமீறி செயல்பட்டதாக குற்றச்சாட்டு: பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்தி பதிலளிக்க தேர்தல் ஆணையம் நோட்டீஸ்  பாஜக
    'தவறாக வழிநடத்தப்படுகிறீர்கள்': பிரதமருக்கு மல்லிகார்ஜுன கார்கே கடிதம் பிரதமர் மோடி
    'என் தந்தையின் உடலை துண்டுகளாக நான் வீட்டிற்கு கொண்டு வந்தேன்': பிரியங்கா காந்தி  குஜராத்
    கட்சித் தலைவர்களுடன் ஏற்பட்ட விரிசல் காரணமாக டெல்லி காங்கிரஸ் மாநில தலைவர் ராஜினாமா டெல்லி

    பாஜக

    தேர்தல் வெற்றிக்குப் பிறகு பிரதமருக்கு உலகத் தலைவர்கள் வாழ்த்து பிரதமர் மோடி
    வாக்கு எண்ணிக்கை முழுவதும் நிறைவு: யார் யாருக்கு எத்தனை சீட்டுகள் கிடைத்தன? இந்தியா
    ஸ்மிருதி இரானி முதல் ராஜீவ் சந்திரசேகர் வரை: 2024 தேர்தலில் தோல்வியடைந்த மத்திய அமைச்சர்களின் பட்டியல்  இந்தியா
    ஆட்சி அமைக்க போவது யார்: கிங் மேக்கர்களாக உருவெடுக்கும் நிதிஷ் குமார், சந்திரபாபு நாயுடு  இந்தியா

    திமுக

    இறுதியாக திமுக- விசிக-மதிமுக இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்து; தனி சின்னத்தில் போட்டி விசிக
    போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வந்த ஜாபர் சாதிக் கைது டெல்லி
    திமுகவுக்கு கமல் ஹாசன் ஆதரவு: மக்களவை தேர்தலில் போட்டியிடவில்லை என அறிவிப்பு  மக்கள் நீதி மய்யம்
    ஜாஃபர் சாதிக் போதைப்பொருள் வழக்கு: இயக்குநர் அமீர் உள்ளிட்ட தமிழ் திரைப்பிரபலங்களுக்கு தொடர்பு இருப்பதாக தகவல் போதைப்பொருள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025