ராஜ்யசபா அவைத்தலைவருக்கு எதிராக INDIA கூட்டணி நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல்
ராஜ்யசபா அவைத்தலைவர் ஜக்தீப் தன்கருக்கு எதிராக 'இண்டியா' கூட்டணி கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை தாக்கல் செய்துள்ளன. இந்த தீர்மானம் ராஜ்யசபா செயலாளரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வாரம் பார்லிமெண்டின் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதன் ஆரம்ப நாளிலிருந்து, காங்கிரஸ் மற்றும் பிற கட்சிகள், தொழிலதிபர் கௌதம் அதானிக்கு எதிரான அமெரிக்க நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மோசடி வழக்கை கருத்தில் கொண்டு அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் இரு சபைகளும் தொடர்ச்சியாக முடக்கப்பட்டன. இதற்கு பதிலாக, ஆளும்கட்சி தரப்போ காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியாவுக்கு தொடர்புடைய அமைப்புக்கு அமெரிக்க தொழிலதிபர் ஜார்ஜ் சோரஸ் வழங்கும் நிதி உதவி குறித்து விவாதிக்க வேண்டும் என்று கூறி வருகிறது. இதனால் இன்றும் அவை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.
அவைத்தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்
இந்நிலையில், 'இண்டியா' கூட்டணி கட்சிகள், ராஜ்யசபா அவைத்தலைவரின் நடவடிக்கைகள் எதிராக, அவைச் செயலாளரிடம் நம்பிக்கையில்லா தீர்மானத்தை தாக்கல் செய்துள்ளன. இந்த அறிவிப்பை காங்கிரஸ் கட்சியின் மூதாதலைவர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டார். "இண்டியா கூட்டணி கட்சிகள் வேறு வழி இல்லாமல், இந்த முடிவை எடுத்து உள்ளன. அவைத்தலைவர் ஒரு தலைபட்சமாக செயல்படுகிறார். இதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது பார்லிமென்ட் ஜனநாயகத்தின் நலனுக்காக தான்." என்றார் அவர்.
Twitter Post
INDIA Bloc submits notice to bring no confidence motion against Rajya Sabha Chairman Jagdeep Dhankhar.#BREAKING #JagdeepDhankhar #NoConfidenceMotion#India #rajyasabha #parliament #LokSabha #Constitution #indiaConstitution #Article67 #VicePresident #Congress #news #controversy... pic.twitter.com/4TAtKWyaJG— VoterMood (@VoterMood_com) December 10, 2024