Page Loader
ராகுல் காந்தியின் 'பாரத் ஜோடா' யாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமானம் மூலம் மும்பை பயணம்

ராகுல் காந்தியின் 'பாரத் ஜோடா' யாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமானம் மூலம் மும்பை பயணம்

எழுதியவர் Sindhuja SM
Mar 17, 2024
11:56 am

செய்தி முன்னோட்டம்

காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் இன்று மும்பை சிவாஜி பூங்காவில் மெகா பேரணியை நடத்தவுள்ளன. இந்தப் பேரணியானது இந்திய தேசிய வளர்ச்சி உள்ளடக்கிய கூட்டணியின்(இண்டியா) மிகப் பெரிய பேரணியாக இருக்கும். இதில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். எதிர்க்கட்சிகள் மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தைத் தொடங்குவதற்கு இந்த பேரணி ஒரு தளத்தை அமைக்கும். 2024 பொதுத் தேர்தலுக்கான தேதிகளை இந்திய தேர்தல் ஆணையம் (ECI) அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவித்த நிலையில், இன்று எதிர்க்கட்சிகள் பேரணியை மேற்கொள்ள உள்ளன. இந்நிலையில், ராகுல் காந்தியின் 'பாரத் ஜோடா' யாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமானம் மூலம் மும்பை பயணம் மேற்கொண்டுள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

மு.க.ஸ்டாலின் விமானம் மூலம் மும்பை பயணம்