
தமிழகத்தில் சிறைவாசிகள் காணொளி மூலம் பேச ஏற்பாடு - அமைச்சர் அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாடு சட்டப்பேரவையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அவர்கள் சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறையில் பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
அதன்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து மத்திய, மாவட்ட பெண்கள் சிறைகள் மற்றும் பெண்கள் தனிச்சிறைகளில் நூலகங்கள் மேம்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து சிறை மற்றும் சீர்திருத்த பள்ளிகளில் முதல் மற்றும் 2ம் நிலை சிறை காவலர்களுக்கு மிகை நேர ஊதியம்
9 மத்திய சிறைகளில் காணொளி சுவர் வசதி ஏற்படுத்தப்படும்.
சிறைவாசிகளுக்கு கூடுதல் செலவுடன் உணவு முறைகள் மாற்றப்படும்.
சிறைவாசிகளுக்கு காணொளி தொலைபேசி வசதிகள் செய்து தரப்படும்.
சிறைவாசிகள் தயாரிக்கும் பொருட்கள் அனைத்தும் காவலர் அங்காடிகளில் விற்பனை செய்யப்படும் போன்ற பல அதிரடி அறிவிப்புகளை அவர் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
தமிழகத்தில் சிறைவாசிகள் காணொளி மூலம் பேச ஏற்பாடு
#JUSTIN "சிறைவாசிகள் காணொலி மூலம் பேச ஏற்பாடு"#TNAssembly #TNPrison #News18TamilNadu https://t.co/7dpn9FD15R pic.twitter.com/szcKgtBjUn
— News18 Tamil Nadu (@News18TamilNadu) April 10, 2023