Page Loader
தமிழகத்தில் மார்ச் மாத இறுதிக்குள் குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாகும் - ட்ரெண்டிங்கின் எதிரொலி
தமிழகத்தில் மார்ச் மாத இறுதிக்குள் குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாகும் - ட்ரெண்டிங்கின் எதிரொலி

தமிழகத்தில் மார்ச் மாத இறுதிக்குள் குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாகும் - ட்ரெண்டிங்கின் எதிரொலி

எழுதியவர் Nivetha P
Mar 09, 2023
06:18 pm

செய்தி முன்னோட்டம்

தமிழக அரசு துறைகளில் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பல பதவிகள் காலியாக இருந்த நிலையில், 9,870 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வினை கடந்த ஆண்டு ஜூலை மாதம் 24ம் தேதி நடத்தப்பட்டது. இதில் மொத்தம் 18 லட்சத்து 36 ஆயிரத்து 535 பேர் தேர்வினை எழுதினார்கள். இதனிடையே அரசு பணிகளில் மகளிருக்கான இடஒதுக்கீட்டில் விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை அமல்படுத்த கால அவகாசம் தேவைப்பட்டதால், குரூப் 4 தேர்வு முடிவுகள் டிசம்பரில் வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்தது. அதன் பின்னர் பிப்ரவரி 2ம் வாரத்தில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என அரசு பணியாளர் தேர்வு வாரியத்தின் வருடாந்திர கால அட்டவணையில் அறிவிக்கப்பட்டது.

ட்ரெண்டிங் ஹேஷ்டேக்

தேர்வு நடந்து பல மாதங்கள் ஆனநிலையில் முடிவுகள் வெளியாக காலதாமதம்

ஆனால் தேர்வு முடிந்து பல மாதங்கள் ஆகியும் இன்னமும் தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை. இதனையடுத்து குரூப் 4 தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி விரைவில் வெளியிடவேண்டும் என்று பல்வேறு துறைகளில் இருந்து வலியுறுத்தப்பட்ட நிலையில், இதன் முடிவுகள் மார்ச் மாதம் வெளியாகும் என கடந்த பிப்ரவரி மாதம் டிஎன்பிஎஸ்சி அறிவித்தது. எனினும் தற்போதுவரை தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை. இந்நிலையில் தேர்வு முடிவுகளை உடனே வெளியிட கோரி, நேற்று(மார்ச்.,8) #WeWantGroup4Results என்னும் ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டானது. இதன் எதிரொலியாக தற்போது மார்ச் மாத இறுதியில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என டிஎன்பிஎஸ்சி தற்போது அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.