
புதுக்கோட்டை ஜல்லிக்கட்டில் 50 அடி உயரத்திற்கு சீறி பாய்ந்த காளை - வைரலாகும் வீடியோ
செய்தி முன்னோட்டம்
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பகுதியில் உள்ள ஆலந்தூரில் ஜல்லிக்கட்டு போட்டி நேற்று(பிப்.,20) காலை நடந்தது.
இந்த போட்டியில் 737 காளைகள் பங்கேற்றது, 211 மாடுபிடி வீரர்கள் களமிறங்கினர். இதில் வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கு பல்வேறு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது.
இந்நிலையில் வாடிவாசலில் இருந்து வெளியேறிய காளை ஒன்று கூட்டத்துக்குள் புகுந்து அங்கு இருந்த கூட்டத்தை பார்த்துள்ளது.
உடனடியாக பின்னோக்கி சென்ற அந்த காளை, பார்வையாளர்களை எவ்வித தொந்தரவும் செய்யாமல் ஒரேயடியாக சுமார் 50 அடி உயரத்திற்கு தாவி சென்றது.
இந்த நிகழ்வு அங்கிருந்த அனைவரையும் அசரவைத்தது.
இதனை அங்கிருந்த சிலர் வீடியோ எடுத்தனர்.
தற்போது அந்த வீடியோ வைரலாக இணையத்தில் பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
புதுக்கோட்டை ஜல்லிக்கட்டில் 50 அடி உயரத்திற்கு சீறி பாய்ந்த காளை
புதுக்கோட்டை ஆலத்தூர் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கு பெற்ற காளை வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து மாடுபுடி வீரர்களிடம் பிடிபடாமல் மைதானத்தின் வெளியே வந்த போது அங்கு பொதுமக்கள் பலர் ஒரு திட்டின் மீது கூடியிருந்தனர் அவர்களை தாண்டி உயரத்தில் பாய்ந்த காளை!@PdkPullingo @Pradeeppdk pic.twitter.com/3zXADVLSwG
— Pudukkottai Page (@pudukkottai55) February 20, 2023