சென்னையில் நரிக்குறவர்களை படம் பார்க்க அனுமதிக்காத ரோகிணி திரையரங்கம் மீது வழக்குப்பதிவு
சென்னையில் உள்ள பிரபலமான மல்டிப்ளக்ஸ் திரையரங்குகளில் ஒன்று ரோகிணி திரையரங்கம். இது சென்னை கோயம்பேடு பகுதியில் அமைந்துள்ளது. இங்கு இன்று(மார்ச்.,30) வெளியான புதிய படத்தினை காண நரிக்குறவ கூட்டத்தினை சேர்ந்தோர் அந்த திரையரங்கிற்கு சென்றதாக தெரிகிறது. அப்போது டிக்கெட்கள் இருந்தும் திரையரங்க நிர்வாகம் இவர்களுக்கு டிக்கெட் வழங்கவில்லை என கூறப்படுகிறது. இந்த விவகாரம் குறித்த வீடியோ பதிவு இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்போது அந்த திரையரங்க பணியாளர் மீது டிக்கெட் இருந்தும் கொடுத்து படம் பார்க்க அனுமதியளிக்காத காரணத்தினால் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.