Page Loader
சென்னையில் 10ம் வகுப்பு கணித தேர்வுக்கு பயந்து தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட மாணவி 
சென்னையில் 10ம் வகுப்பு கணித தேர்வுக்கு பயந்து தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட மாணவி

சென்னையில் 10ம் வகுப்பு கணித தேர்வுக்கு பயந்து தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட மாணவி 

எழுதியவர் Nivetha P
Apr 13, 2023
12:24 pm

செய்தி முன்னோட்டம்

சென்னையில் மணலி ஹரி கிருஷ்ணாபுரம் பகுதியினை சேர்ந்தவர் ரவிசங்கர். வெல்டிங் வேலை பார்க்கும் இவருக்கு 15 வயதில் ராஜஸ்ரீ என்னும் மகள் உள்ளார். ராஜலக்ஷ்மி மணலி பாடசாலை தெருவில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். தமிழகத்தில் தற்போது 10ம் வகுப்பிற்கான பொது தேர்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த மாணவியின் பெற்றோர் நேற்று(ஏப்ரல்.,12) காலை திருவொற்றியூரில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு சென்றுள்ளார்கள். இவர்கள் வெளியே செல்லும்போது நாளை அதாவது இன்று(ஏப்ரல்.,13) நடக்கும் கணிதத்தேர்வுக்கு நன்றாக படிக்குமாறு கூறிவிட்டு சென்றுள்ளார்கள் என்று கூறப்படுகிறது.

பொதுத்தேர்வு 

சிகிச்சைக்காக ராஜ ஸ்ரீ கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் 

ஏற்கனவே மாணவி ராஜ ஸ்ரீ'க்கு கணிதப்பாடம் அந்தளவுக்கு வராது என்று தகவல்கள் தெரிவிக்கிறது. இதனால் அச்சத்தில் இருந்த ராஜ ஸ்ரீ தனது பெற்றோர் வெளியே சென்றதும் சமயலறையில் இருந்த மண்ணெண்ணையினை எடுத்து உடல்முழுவதும் ஊற்றி கொண்டு தீயினை வைத்துள்ளார். தனது உடல் முழுவதும் தீ பரவிய நிலையில் வலித்தாங்க முடியாமல் ராஜ ஸ்ரீ அலறி துடித்துள்ளார். இவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தோர் வந்து அந்த மாணவியை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸில் ஏற்றிக்கொண்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்துள்ளனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று(ஏப்ரல்.,12) மாலை பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தற்போது மணலி காவல்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.