Page Loader
'வேலை செய்வதற்கான சிறந்த முறை' எது என்பதை சொல்கிறார் கீதா கோபிநாத்
சர்வதேச நாணய நிதியத்தின்(IMF) துணை நிர்வாக இயக்குநர் கீதா கோபிநாத்

'வேலை செய்வதற்கான சிறந்த முறை' எது என்பதை சொல்கிறார் கீதா கோபிநாத்

எழுதியவர் Sindhuja SM
Feb 19, 2023
11:00 am

செய்தி முன்னோட்டம்

சர்வதேச நாணய நிதியத்தின்(IMF) துணை நிர்வாக இயக்குநரான கீதா கோபிநாத் சமூக ஊடகங்களில் மிகவும் 'ஆக்டிவ்'வாக இருப்பவர் ஆவார். அவர் ட்விட்டரில் தன் வேலையை பற்றியும் தன் நாட்கள் எப்படி கழிகிறது என்பதைப் பற்றியும் அடிக்கடி ட்வீட் செய்வார். அந்த வரிசையில் தன் வேலையின் மிக அழகான ஒரு தருணத்தை அவர் தற்போது பகிர்ந்து கொண்டுள்ளார். அவருடைய சமீபத்திய பதிவு ஒன்றில் அவரது நாய் லேப்டாப் அருகில் உட்கார்ந்து இருப்பது போன்ற ஒரு படத்தை பகிர்ந்துள்ளார். அந்த படத்தில் 'வேலை செய்வதற்கான சிறந்த முறை' என்ற வாசகமும் எழுதப்பட்டிருக்கிறது. ஒரு நாளுக்கு முன் பகிரப்பட்ட இந்த பதிவை அதற்குள் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் லைக் செய்துள்ளனர். இந்த பதிவு தற்போது வைரலாக தொடங்கியுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

கீதா கோபிநாத் பகிர்ந்த படம்