LOADING...
அதி கனமழை எச்சரிக்கை: ராணிப்பேட்டை, திருவள்ளூருக்கு ரெட் அலர்ட்; 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்
ராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான (Red Alert) எச்சரிக்கை

அதி கனமழை எச்சரிக்கை: ராணிப்பேட்டை, திருவள்ளூருக்கு ரெட் அலர்ட்; 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்

எழுதியவர் Venkatalakshmi V
Oct 22, 2025
02:27 pm

செய்தி முன்னோட்டம்

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று ராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான (Red Alert) எச்சரிக்கை அறிவித்துள்ளது. மேலும், 9 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் மற்றும் பல மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், திருச்சி, ஈரோடு, கோவை, நீலகிரி, தேனி, தென்காசி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

வானிலை நிலவரம்

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகத்தை ஒட்டி நகர்ந்துள்ளதால், பல மாவட்டங்களில் மிதமான முதல் அதி கனமழை வரை வாய்ப்பு உள்ளது. எனினும் இது புயலாக மாறும் சாத்தியம் இல்லை என வானிலை மையம் தெரிவித்துள்ளது. வட தமிழகம், புதுச்சேரி வழியே காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடக்கும். மேலும், ஓரிரு தினங்களில் தெற்கு அந்தமான் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் மேலும் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது என்றும், அதன் போக்கை வானிலை ஆய்வு மையம் கண்கணித்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் அதிக மழை பெய்துள்ளது. குறிப்பாக, பெரியகாலாப்பட்டு பகுதியில் 248 மி.மீ மழை பதிவாகியுள்ளது.