Page Loader
தகுதியானவர்களுக்கு பணி வழங்கப்படவில்லை - 236 ஊழியர்களை பணி நீக்கம் செய்த ஆவின் நிர்வாகம்
பணி நியமனங்களை ரத்து செய்த ஆவின் நிர்வாகம்

தகுதியானவர்களுக்கு பணி வழங்கப்படவில்லை - 236 ஊழியர்களை பணி நீக்கம் செய்த ஆவின் நிர்வாகம்

எழுதியவர் Nivetha P
Jan 04, 2023
11:53 am

செய்தி முன்னோட்டம்

ஆவினில் கடந்த 2020, 2021ம் ஆண்டுகளில் மேலாளர் மற்றும் நிர்வாக பணியாளர்கள் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் காலி பணியிடங்களுக்கான தேர்வு செய்யப்பட்டு, பணிகள் வழங்கப்பட்டது. இந்த பணிக்கான முறையான தேர்வுகள் நடத்தப்படாமல் வினாத்தாள் வெளியானது, தகுதியானவர்களை நேர்காணலுக்கு அழைக்கவில்லை என்று பல புகார்கள் எழுந்தது. இதனை தொடர்ந்து, ஆவின் லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. தலைமையிலான குழு இந்த முறைகேடு தொடர்பாக எழுந்த புகார்களை விசாரித்து வந்தது. இதனையடுத்து தற்போது இது குறித்த அறிக்கையினை விசாரணை மேற்கொண்ட குழு அளித்துள்ளது. அதன்படி, 236 ஊழியர்கள் முறைகேடாக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள் என்று தெரியவந்துள்ளது.

147 பணி நியமனத்திற்கான அறிவிப்புகளும் ரத்து

236 ஊழியர்களை பணி நீக்கம் - பால்வளத்துறை ஆணையர் சுப்பையன் உத்தரவு

இதனை தொடர்ந்து, பணி நியமனம் பெற சிலர் ரூ.10 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை லஞ்சம் கொடுத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது. இதன் பேரில், முறைகேடாக பணி நியமனம் செய்யப்பட்ட 236 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய பால்வளத்துறை ஆணையர் சுப்பையன் உத்தரவினை பிறப்பித்துள்ளார். இதில் மதுரை மாவட்டத்தில் முறைகேடாக பணி நியமனம் பெற்ற 47 பேரின் நியமனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் 147 பணி நியமனத்திற்கான அறிவிப்புகளையும் ரத்து செய்து பால்வளத்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து இந்த முறைகேட்டிற்கு உடந்தையாக இருந்ததாக கூறப்படும் 26 அதிகாரிகள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.