Page Loader
முதல் முறையாக, ஆப்பிரிக்காவின் தான்சானியாவில், சென்னை ஐஐடி!
தான்சானியாவில், சென்னை ஐஐடி!

முதல் முறையாக, ஆப்பிரிக்காவின் தான்சானியாவில், சென்னை ஐஐடி!

எழுதியவர் Venkatalakshmi V
Jul 07, 2023
09:24 am

செய்தி முன்னோட்டம்

இந்தியா அளவில், முன்னணி கல்வி நிறுவனமாக இருக்கும் ஐஐடி, இந்தியாவின் பல மாநிலங்களில், மத்திய அமைச்சரவையின் உயர் கல்வித்துறைத்துறை சார்பாக இயங்கி வருகிறது. கல்வித்துறையிலும், ஆராய்ச்சிகளிலும் முன்னோடியாக திகழும் இந்நிறுவனம், தற்போது தனது கிளையை, முதல்முறையாக கடல்கடந்து திறக்கவுள்ளது. வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அறிக்கைப்படி, தான்சானியா நாட்டின் ஜன்ஜிபார் மாகாணத்தில் முதல் முறையாக சென்னை ஐஐடி வளாகம் வரவுள்ளது. நடப்பு கல்வியாண்டில், அக்டோபர் மாதம் முதல் பட்டப்படிப்புகள் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிற்கு வெளியே, ஐஐடி திறப்பது, இதுவே முதல்முறை என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர், அரசுமுறை பயணமாக தன்சானியா சென்ற வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர், இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.

card 2

வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை

இது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்த ஒப்பந்தம் குறித்து, வெளியுறவுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், 'தான்சானியாவின் ஜன்ஜிபார் மாகாணத்தில் உள்ள ஐஐடி வளாகம் உலகத்தரத்திலான உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையமாக செயல்படும். உலகளாவிய தேவையை கருத்தில்கொண்டு திறனை வளர்க்கும் நோக்கத்துடன் தான்சானியாவில் ஐஐடி வளாகம் அமைக்கப்படுகிறது. இந்திய உயர் கல்வி மற்றும் புத்தாக்கத்தில் உலகத்துக்கு முன்மாதிரியாக இது செயல்படும்' எனக்குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கு வழங்கப்படவுள்ள பட்டப்படிப்புகள், பாடத்திட்டங்கள், மாணவர்கள் தேர்வு முறை உட்பட இதர விஷயங்களை சென்னை ஐஐடி முடிவு செய்யும். செலவினங்களை தான்சானியாவின் ஜன்ஜிபார் அரசு ஏற்கும் என செய்திகள் கூறுகின்றன