LOADING...
வங்கி வேலைக்காக தயாராகி வருகிறீர்களா? 2026-27 காலண்டர் வெளியீடு; உடனே செக் பண்ணுங்க!
ஐபிபிஎஸ் 2026-27 தேர்வு காலண்டர் வெளியீடு

வங்கி வேலைக்காக தயாராகி வருகிறீர்களா? 2026-27 காலண்டர் வெளியீடு; உடனே செக் பண்ணுங்க!

எழுதியவர் Sekar Chinnappan
Jan 17, 2026
01:31 pm

செய்தி முன்னோட்டம்

வங்கி பணிகளுக்கான வேலைவாய்ப்புத் தேர்வு நடத்தும் முக்கிய அமைப்பான வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் (IBPS), 2026-2027 ஆம் ஆண்டிற்கான தற்காலிக தேர்வு காலண்டரை வெளியிட்டுள்ளது. பொதுத்துறை வங்கிகளில் உள்ள கிளார்க், புரொபேஷனரி ஆபீசர், ஸ்பெஷலிஸ்ட் ஆபீசர் மற்றும் ஊரக வங்கிகளுக்கான பதவிகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு இந்த அறிவிப்பு ஒரு முக்கிய வழிகாட்டியாக அமைந்துள்ளது. ஊரக வங்கிகளில் உள்ள உதவியாளர் மற்றும் அதிகாரிகள் பணிகளுக்கான தேதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

தேர்வுகள்

தேர்வு விவரங்கள்

ஊரக வங்கிகளுக்கான முதற்கட்ட தேர்வுகள் ஆகஸ்ட் 2026இல் நடத்தப்பட உள்ளன. முதன்மை தேர்வுகள் செப்டம்பர் 20, 2026 அன்று அதிகாரி பணிகளுக்கும், செப்டம்பர் 27 அன்று உதவியாளர் பணிகளுக்கும் நடைபெற உள்ளது. பொதுத்துறை வங்கிகளில் கிளார்க் பணிகளுக்கான முதற்கட்ட தேர்வுகள் ஆகஸ்ட் 22, 23 மற்றும் 29 அன்றும், முதன்மைத் தேர்வு அக்டோபர் 4, 2026 அன்றும் நடைபெறும். புரொபேஷனரி ஆபீசர் பணிகளுக்கான முதற்கட்ட தேர்வுகள் அக்டோபர் 17, 18 மற்றும் 24 ஆகிய தேதிகளில் நடைபெறும். முதன்மைத் தேர்வு நவம்பர் 22, 2026 அன்று நடத்தப்படும். ஸ்பெஷலிஸ்ட் ஆபீசர் முதற்கட்டத் தேர்வு நவம்பர் 7 அன்றும், முதன்மைத் தேர்வு டிசம்பர் 13 அன்றும் நடைபெறும்.

விண்ணப்பம்

விண்ணப்பிக்கும் முறை மற்றும் முக்கிய குறிப்புகள்

தேர்வுக்கான விரிவான அறிவிப்புகள் அந்தந்த தேர்வுகளுக்கு சில வாரங்களுக்கு முன்பு IBPS அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும். விண்ணப்பதாரர்கள் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும் மற்றும் குறிப்பிட்ட வயது வரம்பிற்குள் இருக்க வேண்டும். விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே பெறப்படும். புகைப்படங்கள் மற்றும் கையொப்பங்களை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்யத் தேவையான ஆவணங்களை முன்கூட்டியே தயார் நிலையில் வைத்திருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Advertisement