
'நீட் விலக்கு மசோதாவில் ஒருபோதும் கையெழுத்திட மாட்டேன்': ஆளுநர் ஆர்.என்.ரவி
செய்தி முன்னோட்டம்
நீட் விலக்கு மசோதாவில் கையெழுத்து போட மாட்டேன் என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று(ஆகஸ்ட் 12) தெரிவித்துள்ளார்.
2023ஆம் ஆண்டு நீட் இளநிலை தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் 'எண்ணி துணிக' என்ற விழா இன்று சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது.
நீட் தேர்வில் மாநில அளவில் முதல் 100 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களும் அவர்களது பெற்றோரும் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.
முதலில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு சால்வை போர்த்தி கௌரவித்த ஆளுநர் ஆர்.என்.ரவி, அதன் பிறகு அவர்களுடன் கலந்துரையாடினர்.
அப்போது பெற்றோர் ஒருவர், தமிழக அரசு இயற்றி இருக்கும் நீட் விலக்கு மசோதாவில் ஏன் கையெழுத்திடவில்லை என்று ஆளுநரிடம் கேள்வி எழுப்பினார்.
சஜிவுக்
அதற்கு பதிலளித்த ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியதாவது:
நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க தமிழக அரசு அனுப்பி இருக்கும் மசோதாவில் ஒருபோதும் கையெழுத்திட மாட்டேன்.
அது மாணவர்களின் போட்டி திறனை கேள்வி குறியாக்கிவிடும்.
நீட் தேர்வில் வெற்றி பெறுவதற்கு கோச்சிங் சென்று தான் படிக்க வேண்டும் என்பது இல்லை.
நீட் தேர்வினால் தான் ஏழை எளிய மாணவர்களுக்கு மருத்துவ படிப்பு சாத்தியமாகி இருக்கிறது.
நீட் தேர்வு குறித்த தவறான புரிதல் தமிழகத்தில் உள்ளது. எந்த மாணவர் இறந்தாலும் அதற்கு நீட் தேர்வு தான் காரணம் என்று இங்கு தவறான பிரச்சாரம் செய்கிறார்கள்.
இந்தியாவுக்கு நீட் தேர்வு கட்டாயம் தேவை. என்று ஆளுநர் கூறியுள்ளார்.