Page Loader
காதலனுடன் இருந்த மகளின் கழுத்தை நெரித்து கொன்ற தாய்: ஹைதராபாத்தில் பரபரப்பு 

காதலனுடன் இருந்த மகளின் கழுத்தை நெரித்து கொன்ற தாய்: ஹைதராபாத்தில் பரபரப்பு 

எழுதியவர் Sindhuja SM
Mar 20, 2024
06:47 pm

செய்தி முன்னோட்டம்

ஹைதராபாத் மாநிலம் இப்ராகிம்பட்டினத்தை சேர்ந்தவர் ஜங்கம்மா. அவருக்கு பார்கவி என்ற 19 வயது மகள் இருக்கிறாள். இந்நிலையில், இன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது காதலனுடன் இருந்த மகள் பார்கவியை ஜங்கம்மா கழுத்தை நெரித்து கொலை செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இன்று, வேலை முடிந்து மதிய உணவுக்காக வீட்டிற்கு வந்த ஜங்கம்மா, பார்கவி தனது காதலனுடன் இருப்பதைக் கண்டார். இதைப் பார்த்து கோபம் அடைந்த ஜங்கம்மா, பார்கவியின் காதலனை வெளியே போக சொல்லிவிட்டு, தன் மகளை அடித்து துன்புறுத்தி இருக்கிறார். பிறகு, ஒரு சேலையை எடுத்து பார்கவியின் கழுத்தை நெரித்து அவர் கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை ஜன்னல் வழியாக நேரில் பார்த்த பார்கவியின் தம்பி, போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post