
இராணிப்பேட்டை மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
புயல் மற்றும் கனமழை காரணமாக இராணிபேட்டை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை(டிச.5) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அம்மாவட்ட ஆட்சியர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
வங்கக்கடலில் சென்னைக்கு வடகிழக்கே 90 கிமீ தூரத்தில் உள்ள மிக்ஜாம் புயல் 8 கிமீ வேகத்தில் கரையை நெருங்கி வருகிறது.
இதனால் சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கனமழை பெய்துவரும் நிலையில், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகுல மாவட்டங்களில் 70 கி.மீ., வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, ஏற்கனவே சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இராணிபேட்டை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
இராணிப்பேட்டை பள்ளிகளுக்கு விடுமுறை
#JUSTIN கனமழை காரணமாக ராணிபேட்டை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை(டிச.5) விடுமுறை - மாவட்ட ஆட்சியர் #Ranipet #CycloneMichaung #schoolleave #News18tamilnadu | https://t.co/uk2cvptM3n pic.twitter.com/tvGRZxPWXr
— News18 Tamil Nadu (@News18TamilNadu) December 4, 2023