Page Loader
டெல்லியில் அழுகிய நிலையில் வெளிநாட்டு பெண்ணின் உடல் மீட்பு
இறந்த பெண்ணுக்கு 60 வயதுக்கு மேல் இருக்கும் என்று டிசிபி ஷஹ்தரா, ரோஹித் மீனா கூறியுள்ளார்.

டெல்லியில் அழுகிய நிலையில் வெளிநாட்டு பெண்ணின் உடல் மீட்பு

எழுதியவர் Sindhuja SM
Mar 18, 2023
12:21 pm

செய்தி முன்னோட்டம்

டெல்லி போலீஸார் நேற்று(மார் 17) கீதா காலனி பகுதியில் மிகவும் அழுகிய நிலையில் வெளிநாட்டு பெண் ஒருவரின் சடலத்தைக் கண்டுபிடித்தனர். ஒரு சுரங்கப்பாதைக்கு அருகில் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக ANI செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இறந்த பெண்ணுக்கு 60 வயதுக்கு மேல் இருக்கும் என்று டிஜிபி ஷஹ்தரா, ரோஹித் மீனா கூறியுள்ளார். சம்பவ இடத்திலிருந்து அந்த பெண்ணின் பாஸ்போர்ட் மற்றும் பிற ஆவணங்களும் மீட்கப்பட்டன. இது குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தியா

நொய்டாவில் கண்டுபிடிக்கப்பட்ட உடல் பாகங்கள்

இதே போன்ற இன்னொரு சம்பவம் நொய்டாவில் நிகழ்ந்திருக்கிறது. நொய்டாவின் ஒரு வடிகாலில் துண்டிக்கப்பட்ட உடல் கண்டுபிடிக்கப்பட்டதாக நொய்டா காவல்துறை வியாழனன்று தெரிவித்தது. அந்த இடத்தில் இருந்து மனித உறுப்புகள் - கால்கள் மற்றும் கைகளை மீட்ட போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். காலை 10 மணியளவில், செக்டார் 8 இன் தொழிற்துறை பகுதியில், தொழிற்சாலைகளுக்கு அருகில் அமைந்துள்ள இரண்டு முதல் மூன்று அடி அகலம் கொண்ட ஒரு வாய்க்காலில், கைகால்கள் கண்டுபிடிக்கப்பட்டன என்று துணை போலீஸ் கமிஷனர் (நொய்டா) ஹரிஷ் சந்தர் பிடிஐயிடம் தெரிவித்தார். நான்கு முதல் ஐந்து நாட்கள் பழமையான இந்த உடல் பாகங்கள், போலீஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ளது.