Page Loader
சூடான் நாட்டில் சிக்கி தவிக்கும் தமிழர்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு 
சூடான் நாட்டில் சிக்கி தவிக்கும் தமிழர்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு

சூடான் நாட்டில் சிக்கி தவிக்கும் தமிழர்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு 

எழுதியவர் Nivetha P
Apr 27, 2023
07:13 pm

செய்தி முன்னோட்டம்

சூடான் நாட்டில் நடந்து வரும் சண்டையால் தற்போது வரை நூற்றுக்கணக்கான உயிர்கள் பலியாகியுள்ளது. இதில் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவதாக அண்மையில் ஐநா தெரிவித்தது. சூடான் ராணுவத்திற்கும் துணை ராணுவ விரைவு ஆதரவுப் படைகளுக்கும்(RSF) இடையே நடந்துவரும் மோதல்களின் ஒரு பகுதியே இந்தச் சண்டையாகும். ஏப்ரல் 15முதல் தாக்குதல் நடந்து வருவதாக WHO செய்தித்தொடர்பாளர் மார்கரெட் ஹாரிஸ் கூறியுள்ளார். இதற்கிடையே சூடானில் சிக்கித் தவிக்கும் சிங்கள மக்களை மீட்டுவர இந்தியா ஆதரவுக்கரம் நீட்டியதற்கு இலங்கை பாராட்டு தெரிவித்திருந்தது குறிப்பிடவேண்டியவை. மேலும் சூடானில் சிக்கியிருந்த 246 இந்தியர்கள் இன்று(ஏப்ரல்.,27)இந்திய வான்படை விமானம் மூலம் மும்பை வந்தடைந்தனர். இந்நிலையில் தற்போது சூடானில் சிக்கித்தவிக்கும் தமிழர்களுக்காக கட்டுப்பாட்டு உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனுடன் இ-மெயில் முகவரியும் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post