
சென்னையில் கனமழை எதிரொலி: காய்கறிகளின் விலையை உயர்த்திய வியாபாரிகள்
செய்தி முன்னோட்டம்
சென்னையில் நேற்றும், இன்றும் 'ரெட் அலர்ட்' அறிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழையுடன் சேர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளதால், KTCC பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
கனமழை பெய்யும் என்பதால் பொதுமக்கள், பால், காய்கறிகள் மற்றும் குடிநீர் கேன்களை வாங்கி சேமிக்கத் தொடங்கினர்.
இதனால் பெரும்பாலான கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் தீர்ந்து போய்விட்டது.
அதோடு, காய்கறிகள் வரத்தும் குறைவாக இருப்பதால், அதன் விலைகளும் உயர்த்தப்பட்டுள்ளது.
60 ரூபாய்க்கு விற்கப்பட்ட தக்காளியின் விலை 100 ரூபாய் வரையும், வெங்காயத்தின் விலை 90 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.
ஒரு சில இடங்களில் அரை லிட்டர் பால் 35 முதல் 40 ரூபாய் வரை விற்கப்படுகிறது என செய்திகள் தெரிவிக்கின்றன.
embed
Twitter Post
கிலோ எவ்ளோ BOSS.!#ChennaiRains #NorthEastMonsoon #vegetables #chennai #TNRains #heavyrain #RedAlert pic.twitter.com/jDfcrZ3kft— தெற்கின் குரல் (@therkinkural) October 15, 2024