
சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு கனமழை
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் கடந்த ஒரு வரமாக பரவலாக மழை பொழிந்து வருகிறது.
நேற்று இரவு முதல், தலைநகர் சென்னையின் பல இடங்களில் மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என அறிவித்துள்ளது.
குறிப்பாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மயிலாடுதுறை, கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் அடுத்த ஒருசில மணிநேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதோடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
11 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு கனமழை
#BREAKING || சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு
— Thanthi TV (@ThanthiTV) November 21, 2023
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு
மயிலாடுதுறை, கடலூர், நாகை, திருவாரூர் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தஞ்சாவூர்,… pic.twitter.com/HI3vySSXuu