உருவாகும் புயல் - 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையானது இடி, மின்னலுடன் பெய்யக்கூடும் என்று வானிலை அறிக்கை தெரிவித்துள்ளது.
நேற்று(மே.,8)தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள அந்தமான் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று(மே.,9)காலை 5.30 மணியளவில் மேலும் வலுப்பெற்று அதே இடத்தில் நிலைக்கொண்டுள்ளது.
இன்று மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நாளை(மே.,10) புயலாக மாறக்கூடும் என்று கூறப்படுகிறது.
இந்த புயலானது வரும் 11ம் தேதி வரை வடக்கு-வடமேற்கு திசையில் நகரக்கூடும்.
அதன் பின்னர் வடக்கு-வட கிழக்கு திசையில் திரும்பி வங்கதேசம்-மியான்மர் கடற்கரை நோக்கி நகர்ந்து செல்லக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மழை
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்
இதனையடுத்து நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தென்காசி, தேனி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
மே 10ம்தேதி சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம்.
தொடர்ந்து, மே 11 முதல் 13ம்தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
நகரின் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்ஸியஸை ஒட்டியே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.