Page Loader
தமிழகத்தின் கடலூர் மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளில் 2 மணி நேரமாக கனமழை
தமிழகத்தின் கடலூர் மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளில் 2 மணி நேரமாக தொடரும் கனமழை

தமிழகத்தின் கடலூர் மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளில் 2 மணி நேரமாக கனமழை

எழுதியவர் Nivetha P
Mar 23, 2023
08:25 pm

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தின் கோடைகாலம் துவக்கப்போகும் நிலையில், ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 5 நாட்களுக்கு மழை தொடரும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தற்போது கடலூர் மாவட்டத்தில் திட்டக்குடி, ராமநத்தம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 மணிநேரமாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் அஞ்சல்

தமிழகத்தின் கடலூர் மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளில் 2 மணி நேரமாக கனமழை