
வீடியோ: துடைப்பத்தை வைத்து துப்பாக்கி ஏந்திய கூட்டத்தை விரட்டியடித்த வீரப் பெண்
செய்தி முன்னோட்டம்
ஹரியானா மாநிலம் பிவானி என்ற பகுதியில் ஹரிகிஷன் என்பவர் வசித்து வருகிறார்.
சில நாட்களுக்கு முன் காலை 8 மணியளவில் அவர் தனது வீட்டுக்கு வெளியே நின்று கொண்டிருந்த போது, திடீரென்று 2 பைக்கில் வந்த 4 மர்ம நபர்கள் ஹரிகிஷன் மீது துப்பாக்கிசூடு நடத்தினர்.
அதனால் அதிர்ச்சி அடைந்த ஹரிகிஷன் வேகமாக தனது வீட்டுக்குள் சென்று மறைய முயற்சித்தார்.
எனினும், அந்த மர்ம நபர்கள் அவரை விடாமல் தொடர்ந்து துப்பாக்கியால் சுட்டனர்.
இந்நிலையில், அந்த துப்பாக்கி சத்தத்தை கேட்ட அப்பகுதியில் இருந்த ஒரு பெண், தன் வீட்டு துடைப்பத்தை வைத்து கொண்டு அந்த மர்ம நபர்களை விரட்டி அடித்தார்.
அந்த பெண்ணை அங்கு எதிர்பார்க்காத மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர்.
டவ்க்ஜ்க
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஹரிகிஷன்
இதனையடுத்து, அனாஜ் மண்டி அவுட்போஸ்ட் நகர காவல் நிலையம் மற்றும் சிஐஏ அதிகாரிகள் உட்பட போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
அப்போது, சம்பவத்தின் போது பதிவான சிசிடிவி காட்சிகள் அவர்களுக்கு கிடைத்தது.
அந்த சிசிடிவி காட்சிகளில் மர்ம நபர்களை துரத்தியடித்த பெண்ணின் வீர செயலும் பதிவாகியுள்ளது.
துப்பாக்கி சூட்டினால் படுகாயமடைந்த ஹரிகிஷன் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஆனால், அவரது குடும்பத்தினர் காவல்துறையில் புகாரளிக்க மறுத்துவிட்டனர்.
மேலும், அந்த மர்ம நபர்கள் எதற்கு துப்பாக்கி சூடு நடத்தினார்கள் என்பதும் இன்னும் தெரியவரவில்லை.
போலீசார் அது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில், துப்பாக்கி சூட்டின் போது பதிவான அந்த வீர பெண்ணின் சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகிறது.
ட்விட்டர் அஞ்சல்
வைரலாகி வரும் சிசிடிவி காட்சிகள்
4 men in Haryana opened fire at a man standing outside his house but was saved by a woman
— RVCJ Media (@RVCJ_FB) November 28, 2023
The man ran for cover while the woman ran towards the goons with a large broom that scared them
What a brave Haryanvi lady 🙏👑pic.twitter.com/K04PHs6NAT