Page Loader
உயிரை காத்த இதய அறுவை சிகிச்சை மருத்துவர், மாரடைப்பால் இறந்த சோகம்! 
சமீபகாலமாக இளம் வயதினர் பலரும் மாரடைப்பால் காலமாகி வருகின்றனர். தற்போது இந்த மருத்துவர் இறந்த செய்து கூடுதல் அதிர்ச்சியை தருகிறது

உயிரை காத்த இதய அறுவை சிகிச்சை மருத்துவர், மாரடைப்பால் இறந்த சோகம்! 

எழுதியவர் Venkatalakshmi V
Jun 07, 2023
05:27 pm

செய்தி முன்னோட்டம்

குஜராத் மாநிலம் ஜாம்நகரை சேர்ந்தவர் மருத்துவர் கௌரவ் காந்தி. அந்த வட்டாரத்திலேயே பிரபலமான இதய அறுவை சிகிச்சை மருத்துவராக அறியப்பட்டவர். இதுவரை அவர், 16,000 இதய அறுவை சிகிச்சைகளை செய்துள்ளார். அப்படிபட்ட கை ராசியான மருத்துவர், இன்று அதிகாலை மாரடைப்பால் காலமான செய்தி, அந்த ஊர் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவருக்கு வயது 41 என்பது கூடுதல் அதிர்ச்சி. நேற்று இரவு, கௌரவ் காந்தி வழக்கம் போல, இரவு உணவு முடிந்ததும் படுக்க சென்றுள்ளார். ஆனால், இன்று காலை வெகுநேரம் ஆகியும் எழவே இல்லையென அவரது மனைவி அருகில் உள்ள மருத்துவமனைக்கு தூக்கி சென்றுள்ளார். அவரை சோதித்த மருத்துவர்கள், கௌரவ், இரவு தூக்கத்திலேயே மாரடைப்பால் காலமாகி உள்ளார் என தெரிவித்துள்ளனர்.

ட்விட்டர் அஞ்சல்

இதய அறுவை சிகிச்சை மருத்துவர், மாரடைப்பால் மரணம்