கொரோனா அறிகுறிகள் குறித்து எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகள்
நாடு முழுவதும் மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகரிக்கும் நிலையில், சில முக்கியமான வழிகாட்டு நெறிமுறைகளை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்டுள்ளது. கடந்த 2019ம்.,ஆண்டுமுதல் பரவ துவங்கிய கொரோனா பாதிப்பால் தற்போது வரை உலகம் முழுவதும் 70 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 70 கோடிக்கும் அதிகமானோர் பாதிப்படைந்துள்ளனர் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது. இந்த வைரஸ் பல்வேறு திரிபுகளை கொண்டாலும் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா தடுப்பூசிகளே இதற்கு போதுமானதாக இருக்கிறது. இந்நிலையில் தற்போது ஓமிக்ரான் பிஏ2.86 வைரஸிலிருந்து திரிபு ஏற்பட்டு புதிய 'ஜே.என்.1 வகை' கொரோனா உருப்பெற்று பெருமளவில் பரவி வருகிறது. கடந்த ஒருமாதத்தில் மட்டும் இதன் வைரஸ் பரவல் எண்ணிக்கை 52%ஆக உயர்ந்துள்ளது என்று உலக சுகாதாரத்துறை கவலை தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 5 பேர் உயிரிழப்பு
இந்நிலையில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் பல்வேறு துறையோ மருத்துவர்களுடன் இணைந்து கலந்தாலோசனை நடத்தியுள்ளார். இதில் மேற்கொள்ளவேண்டிய முக்கிய நடவடிக்கைகள் குறித்த முடிவுகள் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதன்படி, இந்த ஆலோசனை முடிந்த பின்னர் எய்ம்ஸ் மருத்துவமனை சில வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதில், கடந்த 10 நாட்களாக இரும்பல் இருப்பவர்கள், தீவிர சுவாச பிரச்சனை இருப்பவர்கள், 38 டிகிரி செல்ஸியஸ் இல்லை அதற்கு கிட்டத்தட்ட உடல் வெப்பத்துடன் காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்கள் உடனடியாக கொரோனா பரிசோதனை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஜேஎன்1 கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.