தீபாவளி கொண்டாட்டம்: அயோத்தியில் 28 லட்சம் தீபங்கள் ஏற்றி கின்னஸ் சாதனை
அயோத்தியில், நேற்று புதன்கிழமை 'தீபோத்சவ்-2024' கொண்டாடப்பட்டது. தீபாவளியைக் கொண்டாட சரயு நதிக்கரையில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டதால் அங்கே கூட்டம் அலைமோதியது. இந்த ஆண்டு ஜனவரியில் அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகம் செய்யப்பட்ட பிறகு நடைபெறும் முதல் தீபத்ஸவ் விழா இதுவாகும். இந்த கொண்டாட்டத்தின் போது இரண்டு கின்னஸ் உலக சாதனைகளும் படைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. முதல் கின்னஸ் விருது, ஒரே நேரத்தில் 'தியா' சுழற்சியை, அதிக நபர்கள் நடத்தியதற்காக அறிவிக்கப்பட்டது. இரண்டாவது விருது, 25,12,585 எண்ணெய் விளக்குகளை காட்சிப்படுத்தியதற்காக தரப்பட்டது. இது சுற்றுலாத்துறை, உத்தரபிரதேச அரசு, மாவட்ட நிர்வாகம், அயோத்தியால் பெறப்பட்டது. இவ்விரு விருதுகளையும் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பெற்றுக்கொண்டார்.
Twitter Post
#InPics | Ayodhya sparkles with over 25 lakh diyas on Deepotsav; sets world record Photo courtesy: Yogi Adityanath/X#Ayodhya #Deepotsav pic.twitter.com/5sHolDbdZd— NDTV (@ndtv) October 31, 2024
அயோத்தியில் நடைபெறும் தீபத்ஸவத்தைப் பற்றிய கூடுதல் தகவல்கள்
உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில், ராமர், சீதை மற்றும் லட்சுமணன் உருவம் கொண்ட கலைஞர்கள் தேரை இழுத்து, ராமர் அயோத்திக்கு திரும்பியதை அடையாளப்படுத்தினார். மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், துணை முதல்வர்கள் பிரஜேஷ் பதக் மற்றும் கேசவ் பிரசாத் மவுரியா ஆகியோரும் கொண்டாட்டத்தின் போது உடனிருந்தனர். ராமர், லட்சுமணன், சீதை வேடங்களில் நடித்த கலைஞர்கள் மீது ஹெலிகாப்டரில் இருந்து மலர் தூவப்பட்டது குறிப்பிடத்தக்கது.