ரேஷன் கடைகளில் 60 ரூபாய்க்கு தக்காளி விற்பனை செய்ய முடிவு
செய்தி முன்னோட்டம்
ஜூலை 4ஆம் தேதியில் இருந்து சென்னையில் உள்ள 82 ரேஷன் கடைகளில் 60 ரூபாய்க்கு தக்காளி விற்பனை செய்யப்படும் என்று தமிழகத்தின் கூட்டுறவு அமைச்சர் பெரியகருப்பன் அறிவித்துள்ளார்.
கோடை காலம் மற்றும் கனமழை காரணமாக தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விளைச்சல் பாதிக்கப்பட்டு அதன் வரத்து குறைந்துள்ளது.
இதனால், தற்போது தக்காளியின் விலை கிடுகிடுவென உயர்ந்து மொத்த விற்பனை கடைகளில் கிலோ 100 ரூபாய்க்கும், சில்லறை விற்பனை கடைகளில் 120-130 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
இந்த கடும் விலை உயர்வால், பொது மக்கள் கடுமையாக அவதிப்படுகின்றனர்.
வரத்துக்குறைவு காரணமாக பெங்களூர்,ஓசூர் பகுதிகளிலிருந்து தக்காளியை வர வைக்க வேண்டி இருக்கிறது. இதனால், கடந்த சில வாரங்களில் தக்காளியின் விலை 60% அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
கிடப்பி
சென்னையின் மூன்று பகுதிகளில் குறைந்த விலைக்கு தக்காளி விற்பனை செய்யப்பட இருக்கிறது
இந்நிலையில், முதற்கட்டமாக, தக்காளி சென்னையின் மூன்று பகுதிகளில் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படும் என்று அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.
வட சென்னையில் 32 ரேஷன் கடைகளிலும், மத்திய சென்னையில் 25 ரேஷன் கடைகளிலும் , தென் சென்னையின் 82 ரேஷன் கடைகளிலும் ஜூலை 4 ஆம் தேதி தக்காளி விற்பனை தொடங்கும்.
சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதை அடுத்து கூட்டுறவு அமைச்சர் பெரியகருப்பன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதனால், நியாய விலையில் மக்களுக்கு தக்காளி கிடைக்கும் என்று எதிபார்க்கப்டுகிறது.