
மாணவிகளை மசாஜ் செய்ய வற்புறுத்தி அத்துமீறிய தலைமை ஆசிரியர் போக்சோவில் கைது-க்ரைம் ஸ்டோரி
செய்தி முன்னோட்டம்
இந்த வார Newsbytes.,இன் க்ரைம் ஸ்டோரி:சேலம்-மேட்டூர் பகுதியினையடுத்த கருங்கல்லூர் அரசு ஊராட்சி துவக்கப்பள்ளியில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 144மாணவ-மாணவிகள் பயின்று வருகிறார்கள் என்று கூறப்படுகிறது.
அதன்படி இப்பள்ளியில் தலைமையாசிரியராக பணிப்புரியும் ராஜா, அப்பள்ளியில் பயிலும் மாணவிகள், குறிப்பாக 5ம்வகுப்பு படிக்கும் மாணவிகளை தனது அறைக்கு தனிமையில் அழைத்து தினமும் கை-கால்களை அழுத்துமாறும், தலைக்கு மசாஜ் செய்யுமாறும்கூறி தொந்தரவு செய்ததோடு பாலியல் ரீதியாகவும் அத்துமீறியுள்ளார்.
இதனால் பாதிப்படைந்த மாணவிகள் தங்கள் பெற்றோர்களிடம் கூறியுள்ளனர்.
இதனையடுத்து கடந்த 10ம்தேதி அப்பள்ளியினை முற்றுகையிட்ட பெற்றோர் தலைமை ஆசிரியரை எதிர்த்து முழக்கங்களும் எழுப்பியுள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்த வருவாய் கோட்டாட்சியர் தணிகாச்சலம், வட்டாட்சியர் முத்துராஜா, வட்டாரக்கல்வி அலுவலர் சின்னராசு உள்ளிட்டோர் நேரில்வந்து பெற்றோரை சமாதானம் செய்ய முயன்றதாக தெரிகிறது.
க்ரைம்
பள்ளி ஆசிரியைகளுக்கும் பாலியல் தொல்லை கொடுத்த தலைமையாசிரியர்
எனினும், பெற்றோர்கள் எதனையும் ஏற்றுக்கொள்ளாத மனநிலையில் மேட்டூர்-மைசூரு செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் அப்பகுதியில் சில மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து ராஜாவை பெற்றோர்கள் கற்கள், செருப்பு கொண்டு தாக்க சென்ற நிலையில், காவல்துறை அவரை தனியறையில் வைத்து பூட்டியுள்ளனர்.
பின்னர் காவல்துறை மற்றும் உயரதிகாரிகள் இணைந்து பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, குற்றம் செய்தவர் யாரானாலும் தண்டனையளிக்கப்படும் என்று உறுதியளித்ததாக தெரிகிறது.
அதன் பின்னரே அங்கிருந்து பெற்றோர்கள் கலைந்து சென்றுள்ளனர்.
அதனைத்தொடர்ந்து, மேட்டூர் காவல்நிலையத்திற்கு விசாரணைக்காக ராஜா அழைத்துச்செல்லப்பட்டார்,
அப்போது மாணவிகள் மட்டுமின்றி சில ஆசிரியைகளுக்கும் ராஜா பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்துள்ளது.
இந்நிலையில் பெற்றோர்களை அளித்த புகார்களின் பேரில் ராஜா தற்போது போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.