இன்று தொடங்கும் பட்ஜெட் கூட்டத்தொடரில் ஐந்து மசோதாக்களை பட்டியலிட்டுள்ளது மத்திய அரசு
ஆளும் ஆட்சிக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே கடும் அமளி நடந்துவரும் நிலையில், இன்று தொடங்கும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் ஐந்து மசோதாக்கள் நிறைவேற்றப்பட உள்ளது. ஆனால் இதில் பெரிய பொருளாதார சட்டங்கள் எதுவும் இல்லை. மக்களவை மற்றும் மாநிலங்களவை இரண்டிலும் இன்று முதல் ஆகஸ்ட் 12 வரை 19 அமர்வுகள் நடப்படும் என திட்டமிடப்பட்டுள்ளது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்கிறார். 2024-25 ஆம் ஆண்டிற்கான யூனியன் பட்ஜெட் ஜூலை 23 ஆம் தேதி சமர்ப்பிக்கப்படும். இன்றைய அமர்வுக்காக ஐந்து மசோதாக்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இதில் நிதி மசோதா, 2024 சேர்க்கப்படவில்லை.
பட்டியலிடப்பட இருக்கும் 5 மசோதாக்கள் பின்வருமாறு:
பேரிடர் மேலாண்மை(திருத்தம்) மசோதா, 2024 PRS சட்டப்படி, பேரிடர் மேலாண்மையில் பணிபுரியும் பல்வேறு நிறுவனங்களின் பொறுப்புகளில் தெளிவையும் ஒருங்கிணைப்பையும் கொண்டுவர இந்த மசோதா முயல்கிறது. பாரதிய வாயுயான் விதேயக், 2024 விமானச் சட்டம், 1934க்கு மாற்றாக இது அறிமுகம் செய்யப்பட உள்ளது. தெளிவின்மை மற்றும் பணிநீக்கங்களை நிவர்த்தி செய்யவும், உற்பத்தி மற்றும் எளிதாக வணிகம் செய்வதற்கான ஏற்பாடுகளை வழங்கவும், சர்வதேச மரபுகளின் விதிகளை நடைமுறைப்படுத்தவும், சர்வதேச தரங்களை செயல்படுத்தவும் இந்த விமான சட்டம் உதவும்.
காபி (மேம்பாட்டு) மசோதா, 2024
இந்திய காபி தொழிலை மேம்படுத்தவும், காபி வாரியத்தின் செயல்பாட்டை நவீனப்படுத்தவும் இந்த மசோதா முயல்கிறது. ரப்பர்(மேம்பாட்டு) மசோதா, 2024 இந்திய ரப்பர் தொழிலை மேம்படுத்தவும் ரப்பர் வாரியத்தின் செயல்பாட்டை நவீனப்படுத்தவும் இந்த மசோதா அறிமுகப்படுத்தப்பட உள்ளது. கொதிகலன்கள் மசோதா, 2024 கொதிகலன்கள் தொடர்பான காலனித்துவ சட்டங்களை ரத்து செய்து மீண்டும் அதை நடைமுறைப்படுத்த இந்த மசோதா முன்மொழிகிறது. ஆனால், பாஜக அரசாங்கம் பட்ஜெட் கூட்டத்தொடரில் நிலுவையில் உள்ள பெரிய சட்டமன்ற சீர்திருத்தங்கள் எதையும் இதுவரை பட்டியலிடவில்லை. காப்பீட்டுத் துறையை தாராளமயமாக்கல், தேசிய நிதித் தகவல் பதிவேட்டை உருவாக்குதல் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தின் விதிகளை ஒழுங்குபடுத்துதல் ஆகியவை எதுவும் பட்டியலிடப்படவில்லை.