டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுக்கான வயது உச்ச வரம்பு 5 ஆண்டுகள் உயர்வு; தமிழக அரசு அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
அரசுப் பணிகளுக்காக தீவிரமாகப் படித்து வரும் போட்டித் தேர்வர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, டிஎன்பிஎஸ்சி மூலம் மேற்கொள்ளப்படும் நேரடி நியமனத்திற்கான வயது உச்ச வரம்பை 5 ஆண்டுகள் உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் ஆயிரக்கணக்கான அரசு வேலை வேட்கை கொண்ட இளைஞர்களும், வயது முதிர்வால் வாய்ப்பை இழந்த தேர்வர்களுக்கும் கூடுதல் வாய்ப்பு கிடைத்துள்ளது. தமிழக அரசின் இந்த முடிவு மாநிலத்தில் போட்டித் தேர்வு தயாரிப்பில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
புதிய வயது வரம்புகள்
குரூப் 1 மற்றும் குரூப் 2 தேர்வுகளுக்கான புதிய வயது வரம்புகள்
மாநிலத்தின் உயர் அதிகார பதவிகளுக்கான குரூப் 1 தேர்வை எழுதும் பொதுப்பிரிவினருக்கான வயது வரம்பு 32-லிருந்து 37 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும் குரூப் 1 தேர்வில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான வயது உச்ச வரம்பு 37-லிருந்து 42 ஆக உயர்ந்துள்ளது.
இதேபோல் குரூப் 2 மற்றும் 2A தேர்வுகளை எழுதும் பொதுப்பிரிவினருக்கான வயது வரம்பு 30-லிருந்து 35 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த தேர்வில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வயது உச்ச வரம்பு இல்லை என்ற பழைய நடைமுறையே தற்போதும் நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குரூப் 4
குரூப் 4 தேர்வுக்கான உயர்கல்வி மற்றும் பொதுப் பிரிவினர் தகுதிகள்
அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் எழுதும் குரூப் 4 தேர்வில், உயர்கல்வித் தகுதி கொண்ட பிரிவினர் யாருக்கும் வயது உச்ச வரம்பு கிடையாது எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
அதேவேளையில் உயர்கல்வித் தகுதி இல்லாத பொதுப்பிரிவை சேர்ந்த தேர்வர்களுக்கான வயது வரம்பு 30-லிருந்து 35 ஆக உயர்த்தி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் உயர்கல்வித் தகுதி இல்லாத இடஒதுக்கீட்டுப் பிரிவை சேர்ந்த தேர்வர்களுக்கான வயது வரம்பு 32-லிருந்து 37 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
Embed
#JUSTIN || அரசுப்பணிகளில் நேரடி நியமனத்திற்கான வயது உச்ச வரம்பு 5 ஆண்டுகள் உயர்த்தப்படுகிறது - முதலமைச்சர் விஜய் | #TNCMVijay | #GovtJob | #AgeRelaxation | #PolimerNews pic.twitter.com/2OsSBc1dOq
— Polimer News (@polimernews) October 30, 2026