
ஏக்நாத் ஷிண்டே-உத்தவ் தாக்கரே பிரச்சனை: உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது
செய்தி முன்னோட்டம்
மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, ஆளுநரின் சட்டவிரோத முடிவால் தனது பதவியை பெற்றிருந்தாலும், அவரை தகுதி நீக்கம் செய்ய முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த ஆண்டு, ஏக்நாத் ஷிண்டே, எதிர்க்கட்சியான பாஜகவின் ஆதரவுடன், சிவசேனாவை பிளவுபடுத்தி, பெரும்பாலான எம்எல்ஏக்களை கூட்டு சேர்த்து புதிய அரசாங்கத்தை அமைத்தார்.
இதனை எதிர்த்து, முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த விவகாரத்தில், முதல்வர் ஷிண்டே மற்றும் 15 எம்எல்ஏக்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
details
உச்ச நீதிமன்ற தீர்ப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
கடந்த ஆண்டு ஜூன் மாதம், அப்போதைய முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக கிளர்ச்சி செய்ததற்காக திரு ஷிண்டே மற்றும் 15 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய முடியாது.
ஒரு பெரிய நீதிபதிகள் குழு தீர்ப்பளிக்கும் வரை அந்த அதிகாரம் சபாநாயகரிடம் இருக்கும்.
தாக்கரேவின் அரசாங்கத்தை மீட்டெடுப்பதற்கான கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது. ஏனெனில் அவர் ஏற்கனவே ராஜினாமா செய்துவிட்டார்.
ஆனால், மகாராஷ்டிர மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி, திரு தாக்கரே பெரும்பான்மை எம்எல்ஏக்களின் ஆதரவை இழந்துவிட்டார் என்று கூறியது தவறான முடிவு.
திரு ஷிண்டேவின் பிரிவினருக்கு உதவும் முடிவுகளை அவர் எடுத்தது சட்டவிரோதமானது.
ஆளுநர் இந்த விஷயத்தில் எடுத்த முடிவு சட்டத்திற்கு புறம்பானது, என்று 5 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு தீர்ப்பளித்துள்ளது.